This Article is From Dec 15, 2019

“ஐயா ராமதாஸு அதிமுக கூட்டணியைவிட்டுப் போயிடுவாரு…”- DMK எம்பி தடாலடி!

'ஐயா ரொம்ப ரோஷக்காரு. கூட்டணியைவிட்டுப் போனாலும் போயிடுவாரு'- திமுக எம்பி செந்தில்குமார்

“ஐயா ராமதாஸு அதிமுக கூட்டணியைவிட்டுப் போயிடுவாரு…”- DMK எம்பி தடாலடி!

தர்ம்புரி எம்பி செந்தில் குமார், ராமதாஸை கேலி செய்யும் விதத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் (Ramadoss), அதிமுக கூட்டணியில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக, தர்மபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர், செந்தில்குமார் தடாலடி கருத்தைத் தெரிவித்துள்ளார். 

நேற்று ராமதாஸ், “சென்னையில் நாளை இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள சேப்பாக்கம் மைதானத்தில் புகையிலை விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டவிரோத விளம்பரங்களை தமிழ்நாடு அரசு நீக்க வேண்டும்,” என்று தனது ட்விட்டர் பக்கம் மூலம் கோரிக்கை வைத்திருந்தார். 

1pvko01g

தர்ம்புரி திமுக எம்பி செந்தில்குமார்

இதை ரீ-ட்வீட் செய்த எம்பி செந்தில்குமார், “ஐயா ராமதாஸ் சொல்லிட்டாரு இல்ல. கூட்டணி அதர்மத்தை மதிச்சு தமிழக அரசு அதை அகற்றிவிட்டுத் தான் அடுத்த வேலை பார்க்கணும்.

இல்லனா ஐயா ரொம்ப ரோஷக்காரு. கூட்டணியைவிட்டுப் போனாலும் போயிடுவாரு. எங்களுக்குக் கொள்கைதான் முக்கியம். சொல்றத சொல்லிவிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம்,” என்று கேலியாக பதிவிட்டுள்ளார். 

முன்னதாக குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்தது குறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ராமதாஸ், “பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறோம். அந்தக் காரணத்திற்காக அதை ஆதரித்தோம்,” என்றார். தொடர்ந்து ஒரு நிருபர், “அந்த மசோதாவில் ஈழத் தமிழர்கள் பற்றியே குறிப்பிடவில்லையே. அது அவர்களுக்கு எதிராக இல்லையா?,” என்றார். அதற்கு ராமதாஸ், “கூட்டணியில் இருந்தால் ஆதரித்துத்தானே ஆக வேண்டும். அதானே கூட்டணி தர்மம்,” என்றார். 

.