This Article is From Apr 10, 2019

‘நான் வெற்றிபெற்றால் பள்ளி மாணவர்களுக்கு தினமும் ரூ.25!’- பாமக வேட்பாளர் அறிவிப்பு

நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுகிறது

‘நான் வெற்றிபெற்றால் பள்ளி மாணவர்களுக்கு தினமும் ரூ.25!’- பாமக வேட்பாளர் அறிவிப்பு

மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் போட்டியிடுகிறார்

ஹைலைட்ஸ்

  • வரும் 18-ம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல்
  • அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது பாமக
  • கூட்டணியில் பாமக-வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன

நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுகிறது. பாமக சார்பில் அந்த கட்சியின் சாம் பால், வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மத்திய சென்னைத் தொகுதிக்கு உட்பட்ட இடத்தில் தொடர்ந்து பிரசாரம் செய்து வரும் சாம் பால், ‘நான் வெற்றி பெற்று எம்.பி-யானால், பள்ளி மாணவர்களுக்கு சிறப்புத் திட்டம் ஒன்றை வைத்துள்ளேன்' என்று கூறியுள்ளார். 

அவர் மேலும் பேசுகையில், ‘தற்போது தமிழகத்தில் மதிய சத்துணவுத் திட்டம் அமலில் உள்ளது. அதையும் தாண்டி, பள்ளிக்கு வரும் ஒவ்வொரு மாணவருக்கும் தினமும் கையில் 25 ரூபாய் கொடுக்கும் திட்டமும் என்னிடத்தில் உள்ளது. அது குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி அமல் செய்ய நடவடிக்கை எடுப்பேன்' என்றார். 

மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் போட்டியிடுகிறார். அமமுக கூட்டணியில் இருக்கும் எஸ்.டி.பி.ஐ கட்சி, இந்தத் தொகுதியில் தங்களது வேட்பாளரை களமிறக்கியுள்ளது. எனவே மத்திய சென்னையில் மும்முனைப் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தொகுதியில் அதிகம் இருக்கும் சிறுபான்மையினர் ஓட்டு, எஸ்.டி.பி.ஐ-க்கு போகும் என்றும் கூறப்படுகிறது. 

இந்த காரணங்களை வைத்துப் பார்க்கும்போது, மத்திய சென்னையில் எந்தக் கட்சியும் அதிக வாக்கு வித்தியாசத்துடன் வெற்றி பெறாது எனத் தெரிகிறது. 

.