இந்தியா-ஆஸ்திரேலியா மெய்நிகர் உச்சி மாநாடு: காணொளி காட்சி மூலம் பங்கேற்கிறார் பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடி ஒரு வெளிநாட்டுத் தலைவருடன் "இருதரப்பு" மெய்நிகர் உச்சி மாநாட்டை நடத்துவது இதுவே முதல் முறையாகும். 

இந்தியா-ஆஸ்திரேலியா மெய்நிகர் உச்சி மாநாடு: காணொளி காட்சி மூலம் பங்கேற்கிறார் பிரதமர்

இந்தியா-ஆஸ்திரேலியா மெய்நிகர் உச்சி மாநாடு: காணொளி காட்சி மூலம் பங்கேற்கிறார் பிரதமர்

New Delhi:

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இன்று உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனும் இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்துகின்றனர். 

இந்த உச்சி மாநாட்டில், ராணுவ தளங்களுக்கு பரஸ்பர அணுகலுக்கான ஒரு முக்கிய ஒப்பந்தத்தை இரு நாடுகளும் இறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல ஒப்பந்தங்களை இறுதி செய்ய உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

பிரதமர் நரேந்திர மோடி ஒரு வெளிநாட்டுத் தலைவருடன் "இருதரப்பு" மெய்நிகர் உச்சி மாநாட்டை நடத்துவது இதுவே முதல் முறையாகும். 

இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான உறவுகள் வளர்ந்து வரும் சூழலில், மெய்நிகர் உச்சி மாநாடு இரு தலைவர்களுக்கும் உறவின் பரந்த கட்டமைப்பை மறுஆய்வு செய்வதற்கும், கொரோனா தொற்றுநோய்க்கான நடவடிக்கைளை பற்றி விவாதிப்பதற்கும் ஒரு வாய்ப்பாக அமையும்.

இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மிகவும் அன்பான, நட்பான உறவுகளைக் கொண்டுள்ளன, அவை வலுப்பெற்று வருகின்றன.

இருநாட்டு பிரதமர்களும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பலதரப்பு சந்திப்புகளின் போது, நான்கு சந்தர்ப்பங்களில் ஏற்கனவே சந்தித்துள்ளனர். இரு நாடுகளுக்கிடையிலான உறவு 2009ம் ஆண்டில் 'மூலோபாய கூட்டு' நிலைக்கு மேம்படுத்தப்பட்டது. அப்போதிருந்து, இரு நாடுகளும் தங்கள் ஒத்துழைப்பை பல முக்கிய துறைகளில் விரிவுபடுத்தியுள்ளன.

இருதரப்பு பொருளாதார ஈடுபாடுகளில் கடந்த சில ஆண்டுகளில் முன்னேற்றமடைந்துள்ளது. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 2018-19ல் மட்டும் சுமார் 21 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

இந்தியாவில் ஆஸ்திரேலியாவின் ஒட்டுமொத்த முதலீடு சுமார் 10.74 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும், ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் மொத்த முதலீடு 10.45 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.
 (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)