இன்று 69வது பிறந்தநாளை கொண்டாடும் PM Modi - என்ன செய்ய இருக்கிறார்..?

PM Narendra Modi Birthday: கடந்த ஆண்டு, தனது வாரணாசி தொகுதியில் உள்ள பள்ளிக் குழந்தைகளோடு பிறந்தநாளை கொண்டாடினார் பிரதமர் Narendra Modi

 Share
EMAIL
PRINT
COMMENTS

Happy Birthday Narendra Modi: நர்மதா அணையைப் பார்வையிட்ட பின்னர், பொதுக் கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி பேச உள்ளார்.


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. தனது தாயை காலையிலேயே சந்திக்கிறார் பிரதமர் மோடி
  2. தாயின் சந்திப்புக்குப் பிறகு நர்மதா மாவட்டத்துக்கு அவர் செல்கிறார்
  3. அங்கு சர்தார் சரோவர் அணையைப் பார்வையிடுகிறார்

பிரதமர் நரேந்திர மோடி, இன்று 69வது பிறந்தநாளை (narendra modi birthday) கொண்டாடுகிறார். இந்த நாளை தனது தாய்ர ஹீராபென்னிடம் ஆசீர்வாதம் வாங்கி துவங்க மோடி திட்டமிட்டுள்ளார். மோடியின் தாய் குஜராத்தில் உள்ள காந்திநகரில் வசித்து வருகிறார். 98 வயதாகும் ஹீராபென், தனது இளைய மகன் பங்கஜ் மோடியுடன் வாழ்ந்து வருகிறார். 

அதன் பிறகு, நர்மதா மாவட்டத்துக்குச் சென்று, ஒற்றுமைக்கான சிலை, சர்தார் சரோவர் அணை உள்ளிட்டவற்றைப் பார்வையிட உள்ளார் மோடி. உலகின் மிகப் பெரிய சிலை என்று சொல்லப்படும் சர்தார் வல்லபாய் படேலின் ‘ஒற்றுமைக்கான சிலை'-ஐ, பிரதமர் மோடி (pm modi birthday), படேலின் 100வது பிறந்தநாளையொட்டி, சென்ற ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி திறந்து வைத்தார். 

2017 ஆம் ஆண்டு, நர்மதா அணையைத் திறந்து வைத்தார் பிரதமர் மோடி (pm modi birthday). அந்த அணை தற்போது அதன் முழு கொள்ளளவான 138.68 அடியை எட்டியுள்ளது. இந்த அணையின் மூலம் 131 நகர மையங்களுக்கு குடிநீர் கிடைக்கும் என்றும், 9,633 கிராமங்களுக்குப் பாசனத்துக்கு நீர் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் 15 மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் இதன் மூலம் பயனடைய உள்ளதாம். 

நர்மதா அணையைப் பார்வையிட்ட பின்னர், பொதுக் கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி பேச உள்ளார். சுமார் 10,000 பேர் இந்தக் கூட்டத்துக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

பிரதமர், நர்மதா அணையைப் பார்வையிடும்போது, நர்மதா பச்சாவ் அந்தோலன் என்கிற அமைப்பு, போராட்டம் நடத்தும் என்று தெரிகிறது. அணையின் பேக்-வாட்டர் மூலம் சுமார் 180 மத்திய பிரதேச கிராமங்களில் வெள்ளம் ஏற்பட்டதாகவும், எனவே அணை உடனடியாக திறக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துப் போராட உள்ளனர். 

கடந்த ஆண்டு, தனது வாரணாசி தொகுதியில் உள்ள பள்ளிக் குழந்தைகளோடு பிறந்தநாளை கொண்டாடினார் பிரதமர் மோடி. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................