அயோத்தி விவகாரத்தில் தேவையற்ற கருத்துகளை தவிர்க்கவும்: அமைச்சர்களுக்கு மோடி அறிவுறுத்தல்!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் நவ.17ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதனால், அயோத்தி தீர்ப்பு அதற்கு முன்பாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அயோத்தி விவகாரத்தில் தேவையற்ற கருத்துகளை தவிர்க்கவும்: அமைச்சர்களுக்கு மோடி அறிவுறுத்தல்!

நல்லிணக்கத்தை கடைப்பிடிப்பது அனைவரின் பொறுப்பாகும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

New Delhi:

அயோத்தி விவகாரம் தொடர்பாக தேவையற்ற கருத்துகளை தவிர்க்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்களிடம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அயோத்தி வழக்கில் இன்னும் ஒரு சில நாட்களில் இறுதி தீர்ப்பு வரவுள்ள நிலையில், பிரதமர் மோடி இவ்விவகாரம் குறித்து டெல்லியில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்தியுள்ளார். இதில், அமைச்சர்கள் அனைவரும் அயோத்தி விவகாரம் தொடர்பாக தேவையற்ற கருத்துகளை தெரிவிக்க கூடாது என்றும், நல்லிணக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் நவ.17ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதனால், அயோத்தி தீர்ப்பு அதற்கு முன்பாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், கடந்த அக்.27ம் தேதி ஒலிப்பரப்பான "மான் கி பாத்" வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் குறித்து 2010ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் போது, அரசும், அரசியல் கட்சிகளும், சமூகமும் பிளவுகளை உருவாக்கும் முயற்சிகளை எவ்வாறு தடுத்தது என்பதை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார். மேலும், ஒன்றுபட்ட குரல் நாட்டை எவ்வாறு பலப்படுத்த முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்று அவர் விவரித்தார்.

இந்நிலையில், நேற்று டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பட்டுள்ளது. அதில், குறிப்பாக அயோத்தி விவகாரம் தொடர்பாக தேவையற்ற கருத்துகளை தவிர்க்க வேண்டும்  என்றும், நல்லிணக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அமைச்சர்களிடம் பிரதமர் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே போல் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வெற்றி, தோல்வி என்ற கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது என்று பிரதமர் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக ராமர் கோவில் விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை கூற வேண்டாம் என கட்சி நிர்வாகிகளிடமும், செய்தித் தொடர்பாளர்களிடமும் பாரதிய ஜனதா மேலிடம் கேட்டுக்கொண்டிருந்தது. மேலும் எம்பிக்கள் தங்களது தொகுதிகளுக்கு சென்று அமைதியை நிலைநிறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியது. 

அதே போல், தேவையற்ற கருத்துகளை தெரிவிக்க வேண்டாம் என ஆர்எஸ்எஸ் அமைப்பும், தங்கள் உறுப்பினர்களுக்கு தெரிவித்திருந்தது. இந்நிலையில் பிரதமர் மோடி அமைச்சரவைக்கூட்டத்தில் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17ஆம் தேதி ஓய்வு பெற உள்ள நிலையில், அதற்கு முன்பு அயோத்தி நிலப் பிரச்னை வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

அயோத்தி வழக்கில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு தொடர்ந்து 40 நாளாக நடத்தி வந்த விசாரணையை கடந்த அக்.16ம் தேதியுடன் நிறைவு செய்து தீர்ப்பு தேதி தெரிவிக்காமல் ஒத்திவைத்துள்ளது.  

More News