This Article is From Apr 03, 2020

நாட்டு மக்களுக்கு காலை 9 மணிக்கு வீடியோ செய்தி வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆலோசனை நடத்தினார். மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாட்டு மக்களுக்கு காலை 9 மணிக்கு வீடியோ செய்தி வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கொரோனா குறித்து இதுவரை மோடி 2 முறை நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார்.

ஹைலைட்ஸ்

  • கொரோனா பரவல் தடுப்பு குறித்து மாநில முதல்வர்களுடன் மோடி ஆலோசனை நடத்தினார்
  • ஆலோசனை கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகளை முதல்வர்கள் அளித்துள்ளனர்
  • நாளை காலை 9 மணிக்கு நாட்டுமக்களுக்கு உரை நிகழ்த்துகிறார் மோடி
New Delhi:

கொரோனா பரவல் தடுப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 9 மணிக்கு வீடியோ செய்தி ஒன்றை வெளியிடுகிறார். 

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘நாளை காலை 9 மணிக்கு சிறிய வீடியோ செய்தியை எனது இந்திய மக்களுக்காக வெளியிடவுள்ளேன்' என்று கூறியுள்ளார்.

ஊரடங்கு உத்தரவு கடந்த மாதம் 24-ம்தேதி அறிவிக்கப்பட்டது. இதன்பின்னர் இன்றுதான் மோடி நாட்டு மக்களுக்கு அடுத்த முக்கிய தகவலை வெளியிடவிருக்கிறார்.

இதற்கிடையே, நேற்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் வீடியோ கான்பரன்சிங் முறையில் ஆலோசனை நடத்தினார். மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாநாட்டின்போது, ‘ஊரடங்கு முடிந்த பின்னர், அடுத்துவரும் சவால்களை எதிர்கொள்வதற்காக பொதுவான திட்டம் வகுக்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில் நாம் செயல்பட வேண்டும். இதற்கான ஆலோசனைகள் இருந்தால் அவற்றை வழங்கலாம்' என்று முதல்வர்களிடம் மோடி அறிவுறுத்தினார்.

நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

கடந்த சில நாட்களாக ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கியுள்ள மக்களுக்கு பிரதமர் மோடி யோகா வீடியோவை வெளியிட்டிருந்தார். 

இந்தியாவில், 1,965 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 50 பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். 

.