This Article is From Jul 29, 2018

"வாழ்க்கையில் மன நிம்மதி அடைய வேண்டும்": 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் உரை

“அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும், வாழ்க்கையில் மன நிம்மதி அடைய வேண்டும்” என்று பிரதமர் குறிப்பிட்டார்

New Delhi:

புதுடில்லி: ஒவ்வொரு மாதமும், இறுதி ஞாயிற்றுக்கிழமையில், ‘மன் கி பாத்’ என்ற வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இன்று நடைப்பெற்ற 46வது நிகழ்ச்சியில், மாணவர்களுக்கான சிறப்பு உரை ஆற்றினார். “அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும், வாழ்க்கையில் மன நிம்மதி அடைய வேண்டும்” என்று பிரதமர் குறிப்பிட்டார்.

இன்று உரையாற்றிய பிரதமர் மோடி, “மாணவர்களுக்கும், விவசாயிகளுக்கும் ஜூலை மாதம் மிகவும் முக்கியமானது. விடுமுறை முடிந்து கல்லூரி தொடங்க இருப்பது குறித்து மாணவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என நம்புகிறேன். கிராமங்களில் இருந்து வந்து விடுதியில் தங்கி படிக்கும் மாணவ மாணவிகளுக்கு புதிய அனுபவமாய் இருக்கும். புத்தகங்களுக்கு மாற்றாக வேறு எதுவும் இல்லை. மாணவர்கள் அதிகம் படிக்க வேண்டும், புதிய கண்டுபிடிப்புகள் உருவாக்க வேண்டும். பிற மொழிகளையும், மக்களையும், கலாச்சாரத்தையும் மாணவர்கள் கற்று கொள்ள வேண்டும்” என்றார்.

மேலும், கடின சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் வெற்றி கண்ட பலரது வாழ்க்கை பயணங்களை குறித்து பிரதமர் மோடி பகிர்ந்து கொண்டார். மத்திய பிரதேச மாநிலத்தில், பின் தங்கிய குடும்பத்தை சேர்ந்த ஆஷாராம் சவுத்ரி என்ற மாணவர், முதல் முயற்சியிலேயே ஏய்ம்ஸ் மருத்துவ நுழைவு தேர்வில் வெற்றி பெற்றார் என்பதை குறிப்பிட்டிருந்தார். “துப்புரவு தொழிலாளரின் மகனாக பிறந்த ஆஷாராம் சவுத்ரி, கடின உழைப்பால் வெற்றி கண்டுள்ளார். மற்ற மாணவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்கிறார்” என்று பிரதமர் மோடி பாராட்டினார்.

கொல்கத்தாவில், பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வரும் அபய் குப்தா என்றவரின் மகன் ப்ரின்ஸ் குமார் தெரு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தார் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். “கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் வாழ்க்கையில் வெற்றி கண்ட பலர், நமக்கு முன் உதாரணமாக இருந்து வருகின்றனர்” என்றார்.

.