This Article is From Sep 25, 2019

இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்: மோடியுடனான சந்திப்பில் ட்ரம்ப் அறிவிப்பு

ஐ.நா பொதுச் சபையில் 74-வது ஆண்டுக் கூட்டத்தின் பொது விவாதம் தொடங்கியுள்ள நிலையில் அதில் உரை நிகழ்த்துவதற்காகவும் மேலும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்கவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இருநாடுகளுக்கும் இடையில் இருந்த பல பிரச்னைகளில் “குறிப்பிடத்தக்க முன்னேற்றம்” என அறிவித்தனர்.

New York:

நியூயார்க்கில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரப்ம் விரைவில் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று தெரிவித்திருந்தார். இருநாடுகளுக்கும் இடையில் இருந்த பல பிரச்னைகளில் “குறிப்பிடத்தக்க முன்னேற்றம்” என அறிவித்தனர்.

ஐ.நா பொதுச் சபையில் 74-வது ஆண்டுக் கூட்டத்தின் பொது விவாதம் தொடங்கியுள்ள நிலையில் அதில் உரை நிகழ்த்துவதற்காகவும் மேலும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்கவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். 

ஹூஸ்டர் நகரில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற ‘ஹவுடி மோடி' என்ற நிகழ்வில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மோடியுடன் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரே மேடையில் பங்கேற்று பேசினார்கள். 

“வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக நாங்கள் மிக சிறப்பாக செயலாற்றி வருகிறோம். எனவே, இரு நாடுகளுக்கும் இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளப்படும். இது தொடர்பாக வர்த்தக துறை ஆலோசகர் ராபர்ட் லைத்திஸர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்”என்று தெரிவித்தார்.

இருப்பினும் இரு தரப்பினரும் எந்தவித காலக்கெடுவும் வழங்கவில்லை. 

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது: “வர்த்தகத்தைப் பொறுத்தவரை ஹூஸ்டனில் இந்திய நிறுவனமான பெட்ரோனெட் 2.5பில்லியன் டாலருக்கு கையெழுத்திட்ட ஒப்பந்தம் இருந்தது. இது 60 பில்லியன் டாலர் வர்த்தகம் மற்றும் 50,000 வேலைகளை உருவாக்கும். இது இந்தியா எடுத்த மிகப்பெரிய முயற்சி என்று நான் கருதுகிறேன்” என்று தெரிவித்தார். 

இரு தலைவர்களின் சந்திப்புக்குப் பிறகு விஜய் கோகலே ‘காலக் கெடு குறித்து எந்த விவாதமும் இல்லை. ஒரு புரிந்துணர்வு அல்லது ஒப்பந்தத்தை மிக விரைவில் முடிவுக்கு கொண்டு வருவோம் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.

.