ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடி! நாட்டின் உயரிய விருது வழங்கப்படுகிறது!!

பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய 3 நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடி! நாட்டின் உயரிய விருது வழங்கப்படுகிறது!!

சிவப்பு கம்பள வரவேற்பில் பிரதமர் மோடி

ஹைலைட்ஸ்

  • பிரான்ஸ், அமீரகம், பஹ்ரைன் நாடுகளில் மோடி சுற்றுப் பயணம்
  • அமீரக பயணத்தை முடித்துக் கொண்டு பஹ்ரைன் செல்கிறார் மோடி
  • இந்தியாவின் 3வது மிகப்பெரும் வர்த்தக கூட்டாளியாக அமீரகம் உள்ளது
Dubai:

3 நாடுகள் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமா மோடி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார். இன்று அந்நாட்டின் மிக உயரிய விருதான் ''Order of Zayed'' (ஆர்டர் ஆஃப் சயீத்) விருது வழங்கப்பட உள்ளது. 

நேற்று அமீரகத்திற்கு வந்த மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளின் தலைவர்கள் பல்வேறு துறை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று அபுதாபி இளவரசர் ஷேக் முகம்மது பின் சயீதை மோடி சந்தித்து பேசுகிறார். அத்துடன், வெளிநாடுகளில் பணமற்ற பரிவர்த்தனை (Cashless Transaction) செய்வதற்காக ரூபே கார்டு நெட்வொர்க்கை மோடி நிறுவுகிறார். 

அமீரக பயணத்தை தொடர்ந்து பஹ்ரைனுக்கு மோடி செல்கிறார். அங்கு அந்நாட்டின் மன்னர் ஷேக் ஹமாத் பின் இசாவை சந்தித்து மோடி பேசுவார். பஹ்ரைனில் ஸ்ரீநாத்ஜி கோயிலின் சீரமைப்பு பணிகளை மோடி தொடங்கி வைக்க உள்ளார். 

பஹ்ரைன் பயணத்தை முடித்துக் கொண்டு மோடி ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக மீண்டும் பிரான்சுக்கு செல்லவுள்ளார். 

Newsbeep

மோடியின் பஹ்ரைன் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அந்நாட்டிற்கு பயணம் செல்லும் முதல் இந்திய பிரதமராக மோடி உள்ளார். பஹ்ரைனில் இந்திய வம்சாவளியினர் கணிசமாக வாழ்கின்றனர். அவர்களை மோடி சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அமீரக பயணத்திற்கு முன்பாக மோடி பிரான்சுக்கு சென்றார். அங்கு அந்நாட்டு பிரதமர் எடோர்ட் பிலிப் உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.