பிஜேபிக்கும் எனக்கும் சரிவராது: அபிநந்நன் பதாக்

மோடியின் சாயலில் இருக்கும் அபிநந்நன் பதாக், மோடிக்கு ஆதரவாக தான் பிரச்சாரம் செய்யப்போவதில்லை என்று கூறியுள்ளார். தனக்கும் மோடிக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் மாறாக பிஜேபியுடன் தான் பிரச்சனை என்று கூறியுள்ளார்.

பிஜேபிக்கும் எனக்கும் சரிவராது: அபிநந்நன் பதாக்

அபிநந்நன் பதாக், உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ்பாபரை சந்தித்துள்ளேன் என்றார்.

ஹைலைட்ஸ்

  • பிரதமர் மோடியைப் போல் தோற்றம் கொண்ட அபிநந்நன் பதாக் பிஜேபிக்காக பிரச்சார
  • பொதுமக்களின் கோபத்தைக் கண்டு வெறுத்துவிட்டது. இதனால் பிரச்சாரம் செய்ய போவ
  • தனக்கு பிஜேபியுடன் தான் பிரச்சனை, மோடியுடன் இல்லை என்றார்.
New Delhi:

பிரதமர் மோடியின் முகச் சாயலை ஒத்த தோற்றம் கொண்டவர் அபிநந்நன் பதாக். இவர் பிஜேபிக்கு ஆதரவாக பல தேர்தல்களில் பிரச்சாரம் செய்துள்ளார். இதனால் தான் தற்போது இவருடைய அறிவிப்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் சாகரான்பூரை சேர்ந்தவர் அபிநந்நன் பதாக். இவர் பொதுமக்களுக்கு அரசாங்கத்தின் மேல் இருக்கும் கோபத்தைக் கண்டு வெறுத்துவிட்டதாகவும், இதனால் இனி பிஜேபிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப்போவதிலைல என்று கூறியுள்ளார்.

தனக்கும் மோடிக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் மாறாக பிஜேபி கட்சியுடன் தான் பிரச்சனை என கூறியுள்ளார். மேலும், கட்சி செய்யும் தவறால் மக்கள் மத்தியில் பிரதமர் மோடியின் மீதுள்ள மரியாதையும் குறைகிறது என குற்றம்சாட்டியுள்ளார்.