''ஊழலை தடுத்ததால் என்மீது எதிர்க்கட்சிகள் ஆத்திரத்தில் உள்ளன''- விளாசும் மோடி

பிரதமர் மோடிக்கு எதிராக மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சிகளின் மாநாடு நடந்து வரும் நிலையில் அதனை விமர்சிக்கும் விதமாக பிரதமர் மோடி பேசியுள்ளார்.

''ஊழலை தடுத்ததால் என்மீது எதிர்க்கட்சிகள் ஆத்திரத்தில் உள்ளன''- விளாசும் மோடி

யூனியன் பிரததேசமான தாத்ரா - நாகர்ஹவேலியில் நடந்த மாநாட்டில் பேசும் மோடி

Silvassa:

ஊழலுக்கு எதிரான தனது நடவடிக்கையால் சில தலைவர்கள் தன்மீது ஆத்திரத்தில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அவருக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர்கள் மாநாடு நடத்தி வரும் நிலையில், அவர்களை விமர்சிக்கும் விதமாக மோடி பேசியிருக்கிறார். 

மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கொல்கத்தாவில் மாநாடு நடத்தி வருகின்றன. இந்த மாநாட்டில் பேசுபவர்கள் மோடி அரசை கடுமையாக விமர்சித்துள்ளனர். 

இதற்கிடையே யூனியன் பிரதேசமான தாத்ரா - நாகர்ஹவேலியில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது-

ஊழலுக்கு எதிராக நான் கடும் நடவடிக்கை எடுத்தேன். இது சில மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதை நான் தடுத்ததால் என் மீது அவர்களுக்கு ஆத்திரம் வருகிறது. இது இயற்கைதான். 

Newsbeep

இதன் தொடர்ச்சியாக எனக்கு எதிராக கூட்டணியை அமைத்துள்ளார்கள். தங்கள் மாநிலங்களில் ஜனநாயகத்தை புதை குழிக்குள் தள்ளியவர்கள் இப்போது ஜனநாயகத்தை காப்பதுபற்றி பேசுகின்றனர். இது முரண்பாடாக உள்ளது. 

இவ்வாறு மோடி பேசினார்.