This Article is From Aug 16, 2018

“நீண்ட ஆயுள் பெற வாழ்த்துகிறேன்” - டெல்லி முதல்வருக்கு பிரதமர் வாழ்த்து

பல முக்கிய அரசியல் தலைவர்களிடம் இருந்தும் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன

“நீண்ட ஆயுள் பெற வாழ்த்துகிறேன்” - டெல்லி முதல்வருக்கு பிரதமர் வாழ்த்து
New Delhi:

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் 50-வது பிறந்த நாளுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். “ டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கை வாழ பிரார்த்திக்கிறேன்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மட்டும் இல்லாமல் மேலும், பல முக்கிய அரசியல் தலைவர்களிடம் இருந்தும் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. ஆந்திரபிரதேச முதல்வர் சந்திர பாபு நாயுடு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

“பிறந்த நாள் வாழ்த்துக்கள் கெஜ்ரிவால் ஜி. நல்ல ஆரோக்கியத்துடன், இன்னும் பல காலம் தேசத்துக்கான சேவையில் ஈடுபட வாழ்த்துகிறேன்” என்று உமர் அப்துல்லா தனது ட்வீட்டில் வாழ்த்தியிருந்தார்.

நடிகர் விகேஷ் தேஷ்முக், இசையமைப்பாளர் விஷால் டிட்லானி ஆகியோரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

.