புதுமையான ஆசியா குறித்து சிங்கப்பூர் மாணவர்களிடம் பேசிய பிரதமர் மோடி!

இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளும் அறிவு சார்ந்த பொருளாதார நிலைப்பாட்டைக் கொண்டவை

புதுமையான ஆசியா குறித்து சிங்கப்பூர் மாணவர்களிடம் பேசிய பிரதமர் மோடி!

ஹைலைட்ஸ்

  • மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று சிங்கப்பூருக்கு வருகை தந்தார்
  • நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்குச் சென்றார்
  • அங்குள்ள மாணவ, மாணவிகளிடம் புதுமைகள் குறித்து கலந்துரையாடினார்
Singapore: பிரதமர் மோடி இன்று சிங்கப்பூரில் உள்ள பிரபலமான நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்குச் சென்று அங்குள்ள மாணவ, மாணவிகளிடம் வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் புதுமையின் தேவை எவ்வளவு என்பது குறித்து கலந்துரையாடினார்.

பிரதமர் மோடியின் நன்யாங் பல்கலைக்கழக வருகையின் போது இந்தியாவின் முக்கிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுடன் கல்வி மற்றும் தொழில் சார்ந்த துறைகளை வலுப்படுத்த கூட்டு முயற்சியாக சிங்கப்பூரின் நன்யாங் பல்கலைக்கழகத்துடன் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பிரதமர் மோடியின் பல்கலைக்கழக வருகையின் போது அவருக்குத் துணையாக சிங்கப்பூர் கல்வி அமைச்சர் ஓங் யே குங் உடன் வந்தார். மேலும் அவர் நன்யாங் பல்கலையில் நடந்த கண்காட்சியையும், அங்கு வைக்கப்பட்டிருந்த சமூக ரோபோவையும் பார்வையிட்ட பின்னர் மாணவர்களிடம் அதுகுறித்த கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

மூன்று நாள் பயணமாக சிங்கப்பூருக்கு வந்த பிரதமர் மோடி, நேற்று பல்கலைக்கழகத்தில் ‘புதுமையான ஆசியாவுக்கான மாற்றம்’ என்ற தலைப்பில், தலைமை பேராசிரியர் சுப்ரா சுரேஷ் உடனும் உடனிருந்த மாணவர்களுடனும் கலந்து உரையாடினார். அப்போது பேராசிரியர் சுரேஷ் கூறுகையில், “இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளும் அறிவு சார்ந்த பொருளாதார நிலைப்பாட்டைக் கொண்டவை. இந்த அறிவு அந்நாட்டின் மாணவர்கள் பயிலும் பல்கலைக்கழகங்களின் வாயிலாகவே நாட்டைச் சேருகின்றன” என்றார்.

இந்த நிகழ்வில் ஆக்ஸிலார் வென்சர்ஸ் சேர்மன் மற்றும் இன்போசிஸ் ஐடி நிறுவனத்தின் துணை நிறுவனரும் முன்னாள் தலைமை நிர்வாக இயக்குநரான கிரிஷ் கோபாலகிருஷ்ணன், "நன்யாங் பல்கலைக்கழகத்தின் முதுநிலை முனைவர் படிப்புக்கும், இதர ஆராய்ச்சிப் படிப்புக்கும் ஊக்கத்தொகையாக 4 மில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் அளித்தார்.

இதில் 2 மில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் சர்வதேச அளவில் சிறந்த முதுநிலை முனைவர் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு நன்யாங் பல்கலையில் படிப்பதற்கு அளிக்கப்படும் என அறிவித்தார். மேலும் இதர 2 மில்லியன் சிங்கப்பூர் டாலர்கள் நன்யாங் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆராய்ச்சி படிப்புகள் மேற்கொள்ளவிருக்கும் பெங்களுரூ மற்றும் சென்னை ஐஐடி மாணவர்களுக்கு தலா 1 மில்லியன் என வழங்கப்படும்" என்று அறிவித்துள்ளார்.