This Article is From Oct 11, 2019

சென்னை வந்த பிரதமர் மோடி 3 மொழிகளில் ட்வீட் செய்து அசத்தல்!

பிரதமர் நரேந்திர மோடிக்கும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான முறைசாரா சந்திப்பு கடந்த ஆண்டு சீனாவின் வுஹான் பகுதியில் நடந்தது.

சென்னை வந்த பிரதமர் மோடி 3 மொழிகளில் ட்வீட் செய்து அசத்தல்!

ஆளுநர் பன்வரிலால், முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மோடியை வரவேற்றனர்.


காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா மற்றும் சீன இடையே கடும் வார்த்தை போர் நடுந்து வரும் நிலையில், பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் இன்று சென்னை மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகின்றனர். 

இந்த சந்திப்பிற்காக சென்னை வந்த பிரதமர் மோடி, தனது ட்வீட்டர் பதிவில் ஆங்கிலத்தில், கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 


இதேபோல், தமிழிலிலும் ட்வீட்டரில் பதிவு செய்துள்ளார். அதில், சென்னை வந்திறங்கியுள்ளேன். கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த ட்வீட்டர் பதிவில், தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் அவரை வரவேற்ற படங்களையும் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கும் இடையிலான முறைசாரா சந்திப்பு கடந்த ஆண்டு சீனாவின் வுஹான் பகுதியில் நடந்தது. அதைத்தொடர்ந்து, இரண்டாவது முறைசாரா சந்திப்பு சென்னை அருகே உள்ள கடலோர நகரமான
மாமல்லபுரத்தில் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது.

இரண்டு தலைவர்களையும் வரவேற்கும் விதமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் செல்லும் வழிநெடுக
பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


 

.