This Article is From Sep 20, 2018

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மெட்ரோ ரயிலில் சென்ற மோடி

துவாரகாவில் சர்வதேச மாநாடு மற்றும் எக்ஸ்போ மையத்தை தொடங்கி வைப்பதற்காக மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம் சென்றார்.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மெட்ரோ ரயிலில் சென்ற மோடி

டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்த மோடி

ஹைலைட்ஸ்

  • தவுலா குலான் மெட்ரோ நிலையத்தில் இருந்து துவாரகா வரை மோடி சென்றார்.
  • துவாரகாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்
  • மெட்ரோவில் பிரதமருடன் பொதுமக்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்
New Delhi:

டெல்லி ஏர்போர்ட் எக்ஸ்ப்ரஸ் மெட்ரோ ரயிலில் தவுலா குவான் நிலையத்திலிருந்து துவாரகா வரை பிரதமர் நரேந்திர மோடி இன்று பயணம் மேற்கொண்டார். துவாரகாவில் சர்வதேச மாநாட்டிற்கான அடிக்கல் நாட்டுவிழா மற்றும் எக்ஸ்போ மையம் திறப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக மோடி சென்றார். 

6a7htrvo

சாலை மார்க்கமாக சென்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதற்காக அவர் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டார். மெட்ரோ ரயிலில் அவரது பயணம் 18 நிமிடங்கள் நீடித்தது. 

இதுகுறித்து மெட்ரோ நிலைய அதிகாரிகள் கூறும்போது, “தவுலா குவான் மெட்ரோ ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி மாலை 3.13-க்கு ஏறினார். பின்னர் சரியாக 3.27-க்கு துவாராக ரயில் நிலையத்தில் இறங்கினார். மறு மார்க்கமாக துவாரகாவில் 4.39-க்கு ஏறிய மோடி 4.54-க்கு இறங்கியதாக தெரிவித்தனர்.

மெட்ரோ ரயிலுக்குள் மோடியைக் கண்ட மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். பயணிகள் பலர் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். 
 
முன்னதாக தென்கொரிய அதிபர் மூன் ஜே கடந்த ஜூலையில் இந்தியாவுக்கு வந்தபோது இருவரும் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டனர். 

.