This Article is From Sep 14, 2018

குஜராத்தில் உலகின் மிக உயரமான சிலையை மோடி திறந்து வைக்கிறார்

குஜராத்தில் நிறுவப்பட்டுள்ள 182 அடி உயர சர்தார் வல்லபாய் படேலின் சிலை நாட்டின் ஒற்றுமைக்கு அடையாளமாக இருக்கும் என்று குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் உலகின் மிக உயரமான சிலையை மோடி திறந்து வைக்கிறார்

சர்தார் படேலின் சிலை வடிவமைப்பு இறுதிக்கட்ட பணியில் இருப்பதை காணலாம் (படம் - ஏ.எஃப்.பி.)

New Delhi:

புதுடெல்லி: குஜராத்தில் நிறுவப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலையை உலகிலேயே உயரமான சிலை என்று குஜராத் அரசு வர்ணித்துள்ளது. அக்டோபர் 31-ம்தேதி படேலின் பிறந்த நாளை முன்னிட்டு அதனை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.

பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த ரூபானி, படேலின் சிலை 182 மீட்டர் உயரம் இருக்கும் என்றும், நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் அடையாளமாக இந்த சிலை விளங்கும் என்றும் கூறினார். படேலின் சிலையை “ஒற்றுமையின் சிலை” என்று குஜராத் அரசு அழைத்து வருகிறது.

சிலை உருவாக்கம் குறித்து பேசிய ரூபானி, “நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் இரும்பு, மண், தண்ணீர் உள்ளிட்ட மூலப் பொருட்கள் கொண்டு வரப்பட்டு சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எங்களை முன்பு எங்களை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. ஆனால் இப்போது உலகத்தரம் வாய்ந்த ஒன்றை நாங்கள் உருவாக்கியுள்ளோம் என்றார். படேல் சிலை உருவாக்கத்திற்கான அறிவிப்பை 2013-ல் குஜராத் முதல்வராக இருந்தபோது மோடி வெளியிட்டார்.

காங்கிரஸ் தலைவராக இருந்த சர்தார் படேல் நாட்டின் முதல் உள்துறை அமைச்சராக பணியாற்றினார்.

.