This Article is From Sep 04, 2018

விருது பெறும் ஆசிரியர்களை இன்று பிரதமர் மோடி கெளரவிக்கிறார்

கல்வி துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு ‘தேசிய நல்லாசிரியர்’ விருதுகளை, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்க உள்ளார்

விருது பெறும் ஆசிரியர்களை இன்று பிரதமர் மோடி கெளரவிக்கிறார்
New Delhi:

சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5 ஆம் தேதி, ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களை பிரதமர் மோடி கெளரவிக்கவுள்ளார். டில்லியில் இன்று நடைப்பெற இருக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்ள இருக்கிறார்.

அதனை தொடர்ந்து, வரும் புதன்கிழமை நடைப்பெற இருக்கும் விழாவில், கல்வி துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு ‘தேசிய நல்லாசிரியர்’ விருதுகளை, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்க உள்ளார்

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக்கும் மாணவர்களுக்கும் பெருமை சேர்த்த ஆசிரியர்கள், தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சென்ற ஆண்டு வரை, 300க்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வந்தது. ஆனால், நல்லாசிரியர் விருதின் முக்கியத்துவத்தை கருதி, தற்போது ஆண்டுக்கு 45 ஆசிரியர்களுக்கு மட்டும் விருது வழங்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், இந்த விருதுக்காக 6,692 பேர் விண்ணப்பித்திருந்தனர். தீவிரமான பரிசீலனைக்குப் பிறகு 152 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் இருந்து 45 பேரை நல்லாசிரியர் விருதுக்கு நடுவர் குழு தேர்ந்தெடுத்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
 

.