இயேசு கிறிஸ்துவின் அர்ப்பணிப்பை நினைவு கொள்வோம்: பிரதமர் மோடி புனித வெள்ளி வாழ்த்து!

உலக முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்கள் இன்று புனித வெள்ளி தினத்தை கொண்டாடுகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி கிறிஸ்தவ மக்களுக்கு தனது வாழ்த்துக்களை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இயேசு கிறிஸ்துவின் அர்ப்பணிப்பை நினைவு கொள்வோம்: பிரதமர் மோடி புனித வெள்ளி வாழ்த்து!

இயேசு கிறிஸ்துவின் அர்ப்பணிப்பை நினைவு கொள்வோம்: பிரதமர் மோடி

ஹைலைட்ஸ்

  • இயேசு கிறிஸ்துவின் அர்ப்பணிப்பை நினைவு கொள்வோம்: பிரதமர் மோடி
  • இயேசு கிறிஸ்துவின் தைரியமும் நேர்மையும் தனித்து நிற்கின்றன
  • அன்பு, மன்னிப்பு குறித்த போதனைகளை அனைவருக்கும் கற்பிக்க வேண்டும்
New Delhi:

மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் இயேசு கிறிஸ்து புனித வெள்ளி தினத்தில் இயேசு கிறிஸ்துவை நினைவு கூர்ந்து பிரதமர் நரேந்திர மோடி கிறிஸ்துவர்களுக்கு  வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலக முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்கள் இன்று புனித வெள்ளி தினத்தை கொண்டாடுகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி கிறிஸ்தவ மக்களுக்கு தனது வாழ்த்துக்களை ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, இயேசு மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவரது தைரியமும் நேர்மையும் தனித்து நிற்கின்றன. அவரது நீதி உணர்வும் அவ்வாறே இருக்கிறது. இந்த புனித வெள்ளியன்று, இயேசு கிறிஸ்துவையும், உண்மை, சேவை, நீதிக்கான அவரது அர்ப்பணிப்பையும் நினைவு கொள்வோம் என்று அவர் கூறியுள்ளார்.

இதேபோல், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, இந்த புனித வெள்ளி அன்று, நாம் அமைதி, சக மனிதர்களிடம் இரக்கம் மற்றும் சுய தியாகத்தின் ஆவி ஆகியவற்றால் ஆசீர்வதிக்கப்படுவோம் என புனித வெள்ளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


காங்கிரஸ் கட்சியின் ட்வீட்டர் பக்கத்தில் கூறியதாவது, இயேசு கிறிஸ்துவின் அன்பு, மன்னிப்பு, இரக்கம் குறித்த போதனைகளை அனைவருக்கும் கற்பிக்க வேண்டும். இந்த காலங்களில், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பு, மன்னிப்பு மற்றும் இரக்கம் பற்றிய போதனைகள் உள்ளிட்ட அனைத்தையும் கற்பிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், அவர் சிலுவையில் அறையப்பட்ட நாளையும் நினைவுகூரும் வகையில், இந்த நாள் புனித வெள்ளி அல்லது கருப்பு வெள்ளி என்று அழைக்கப்படுகிறது. 

கேரளாவில் மொத்த மக்கள் தொகையில் 18 சதவீதம் கிறிஸ்துவ மக்கள் உள்ளனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக அவர்கள் யாரும் சர்ச்சுகளுக்கு செல்லவில்லை. 

With inputs from PTI