அபிநந்தன் விவகாரத்தில் முதன்முறையாக மவுனம் உடைத்த பிரதமர் மோடி

வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை மத்திய அரசு எப்படி மீட்டது என்பதுகுறித்த தகவல்களை சுட்டிக்காட்டி சென்னை பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

அபிநந்தன் விவகாரத்தில் முதன்முறையாக மவுனம் உடைத்த பிரதமர் மோடி

விங் கமாண்டர் அபிநந்தன் கடந்த வெள்ளியன்று விடுதலையானபோது அவரை வரவேற்று ட்வீட் செய்தார் மோடி

Chennai:

விங் கமாண்டர் அபிநந்தன் எப்படி மீட்கப்பட்டார் என்பது குறித்த எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு முதன்முறையாக பிரதமர் மோடி விடை அளித்துள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது-

தமிழக மீனவர்களுக்கு ஒருமுறை இலங்கை அரசால் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்களை மத்திய அரசு மீட்டது. சவூதி அரசுடன் மத்திய அரசு தொடர்பு கொண்டு பேசி 850 கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 

விரைவில் 850 இந்தியர்கள் இந்தியா திரும்பி விடுவார்கள். பாகிஸ்தான் பிடியில் சிக்கிய அபிநந்தன் 2 நாட்களில் மீட்கப்பட்டார். அது எப்படி நடந்தது என்பதை நான் மீண்டும் விளக்கத் தேவையில்லை. 

இவ்வாறு மோடி பேசினார். பாகிஸ்தான் பிடியில் சிக்கிய விங் கமாண்டர் அபி நந்தன் மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று விடுவிக்கப்பட்டார். இதேபோன்று நல்லெண்ண அடிப்படையில் அவரை விடுவிப்பதாகவும் இம்ரான் கான் கூறினார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு என்ன முயற்சி எடுத்தது என்பது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தன. 
 

d1krv6bg

 

அதற்கு, முன்பு மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார். ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை. 

பாகிஸ்தானின் எஃப். 16 ரக போர் விமானத்தை அபி நந்தன் கடந்த புதன் அன்று சுட்டு வீழ்த்தினார். இதையடுத்து எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் அரசிடம் அபிநந்தன் சிக்கிக் கொண்டார். பின்னர் 2 நாட்களுக்குப் பின்னர் வெள்ளியன்று அவர் விடுவிக்கப்பட்டார். அவரை தேசிய ஹீரோவாக மக்கள் கொண்டாடி வருகின்றனர்.