This Article is From Sep 17, 2019

Foreign Funding : தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்களுக்கு புதிய விதிமுறைகள்

முன்னதாக வெளிநாட்டு நிதி பெற அனுமதி கோரும் இயக்குநர்கள் மற்றும் உயர் அதிகாரி மட்டுமே அத்தகைய அறிவிப்பை வெளியிட வேண்டியிருந்தது.

மோடியின் அரசு வெளிநாட்டு நிதியைப் பெறுவதில் உள்ள விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது.

New Delhi:

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு உள்துறை அமைச்சகம் வகுத்துள்ள புதிய விதிகளின்படி தமது ஊழியர்கள் மற்றும் அதன் அதிகாரிகள் அனைவரும் தங்கள் மீது மத மாற்றங்களுக்காக வழக்கு தொடரப்படவில்லை அல்லது தண்டிக்கப்படவில்லை என்பதை அரசாங்கத்திற்கு அறிவிக்க வேண்டும்.  

இன்று வெளியான அரசு அறிவிப்பின் படி வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை )விதிகள் 2011இல் மாற்றங்களை அறிவித்தது. இதில் தனிநபர்கள் பரிசுகள் ரூ.1 லட்சம் வரை என இருந்தால் அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. இதற்கு முன்னதாக பரிசு பொருளின் மதிப்பு  ரூ. 25,000 ஆக இருந்தால் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். 

தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் “அலுவலக பொறுப்பாளர்கள் மற்றும் முக்கிய செயல்பாட்டாளர்கள், உறுப்பினர்கள்” ஒரு மத நம்பிக்கையிலிருந்து மற்றொரு மதத்திற்கு மாற்றியதற்காக. “வழக்கு தொடரப்படவோ அல்லது தண்டிக்கபடவோ இல்லை” என்பது குறித்து கட்டாயமாக சான்று வழங்க வேண்டும். 

இதற்கு முன்னதாக வெளிநாட்டு நிதி பெற அனுமதி கோரும் இயக்குநர்கள் மற்றும் உயர் அதிகாரி மட்டுமே அத்தகைய அறிவிப்பை வெளியிட வேண்டியிருந்தது. 

மேலும் தற்போது விண்ணப்பதாரர் மட்டுமல்ல, தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் வெளிநாட்டு நிதிகளை  ‘திசை திருப்பவோ', ‘தேசசத்துரோகம்' அல்லது ‘வன்முறைககளை ஆதரிப்பதில் ஈடுபடவில்லை' என்று உறுதியளிக்க வேண்டும். 

வெளிநாட்டுக்கு செல்லும் நேரத்தில் ஏதேனும் மருத்துவ அவசரநிலை ஏற்பட்டால் அரசுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர் தெரிவிக்க வேண்டுமென புதிய விதிகள் தெளிவு படுத்துகின்றன. 

உறுப்பினரின் நிதி ஆதாரம், இந்திய ரூபாயில் தோராயமான மதிப்பு, நோக்கம் மற்றும் பணம் பயன்படுத்தப்பட்ட விதம் போன்ற விவரங்களை கொடுக்க வேண்டும். இதற்கு முன் இந்த விவரங்களை இரண்டு மாதங்களுக்குள் கொடுக்க வேண்டும். 

கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசு வெளிநாட்டு நிதியைப் பெறுவதில் உள்ள விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.