இது என்னடா புது ஐட்டமா இருக்கு..!- நெருப்ப வச்சி ஹேர்-கட்டிங்!! #TikTokViral

இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பதில் தெளிவான தகவல் இல்லை என்றாலும், பலரும் இந்தியாவில்தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கும் என்று ஆருடம் சொல்கிறார்கள். 

இது என்னடா புது ஐட்டமா இருக்கு..!- நெருப்ப வச்சி ஹேர்-கட்டிங்!! #TikTokViral

“வெளியே ஹாரன் சத்தம் கேட்டால் அது இந்தியா என்பது உங்களுக்குத் தெரியும்,” என்று ஒரு டிக் டாக் பயனர் கூறுகிறார். 

ஸ்டெப் கட்டிங், பாப் கட்டிங், புள்ளிங்கோ கட்டிங், மிலிட்டரி கட்டிங் என ஹேர் ஸ்டைலிங்கில் பல வகைகள் இருக்கின்றன. ஆனால், அந்த ஹேர் கட்டிங்-ஐ நெருப்பின் உதவியோடு செய்தால்… கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதல்லவா. ஆனால், இதைப் போன்ற ஒரு சம்பவம் நடந்து, தற்போது வைரலாகியும் வருகிறது. 

டிக் டாக் செயலியில் பிரபலமான அந்த வீடியோ, கிட்டத்தட்ட நான்கரை கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது. வீடியோவில் முடிதிருத்தும் கடையில் ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவரின் தலைக்கு மேல் நெருப்பு கொழுந்துவிட்டு எரிகிறது. அதை சீண்டிவிட்டபடியே, தொடர்ந்து ஒரு நபர் முடிதிருத்துகிறார். ஒரு கட்டத்தில் தலையில் எரியும் நெருப்பு அணைந்து போகிறது. இந்த மொத்த சம்பவத்தின் போதும், யாருடைய முடி எரிந்ததோ, அவர் மிக சாந்தமாக அமர்ந்திருக்கிறார். 

'Prakash_zone143' என்கிற டிக் டாக் பெயரைக் கொண்டவர்தான், இந்த வீடியோவை பதிவேற்றியுள்ளார். 

எச்சரிக்கை: இந்த வீடியோவில் வருவதை வீட்டில் செய்து பார்க்க வேண்டாம். காயம் ஏற்படலாம்.

டிக் டாக் தளத்தில் மட்டும் இந்த வீடியோவுக்கு 3 கோடி பார்வைகள் கிடைத்துள்ளன. ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளன. அங்கு 1.3 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளன. மொத்தமாக 4.3 கோடி முறை இந்த வீடியோ பார்க்கப்பட்டுள்ளன. 

இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பதில் தெளிவான தகவல் இல்லை என்றாலும், பலரும் இந்தியாவில்தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கும் என்று ஆருடம் சொல்கிறார்கள். 

“வெளியே ஹாரன் சத்தம் கேட்டால் அது இந்தியா என்பது உங்களுக்குத் தெரியும்,” என்று ஒரு டிக் டாக் பயனர் கூறுகிறார். 

“இந்த பார்பரை, அந்த நபர் நம்புவதைப் போல நான் யார் மீதும் நம்பிக்கை வைக்க மாட்டேன்,” என இன்னொரு பயனர் கேலியாக கமென்ட் இடுகிறார். 

Click for more trending news

More News