This Article is From Aug 15, 2019

நடுவானில் மோதிய பறவை! விமானத்தை வயலில் இறக்கி 233 பேரை காப்பாற்றிய விமானி!!

விமானி சரியான முறையில் கட்டுப்பாட்டுடன் விமானத்தை தரையிறக்காமல் இருந்திருந்தால், பெரும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடுவானில் மோதிய பறவை! விமானத்தை வயலில் இறக்கி 233 பேரை காப்பாற்றிய விமானி!!

233 பேரின் உயிரைக் காப்பாற்றிய விமானி டேமிர் யுசுபோவை ரஷ்யா பாராட்டியுள்ளது.

Moscow:

ரஷ்யாவில் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது பறவை ஒன்று மோதியதால் விமானம் தடுமாறியது. இதையடுத்து சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி டேமிர் யுசுபோவை, விமானத்தை சோள வயலில் இறக்கி 233 பேரின் உயிரைக் காப்பாற்றினார்.

யுரால் ஏர்பஸ் 312 ரகத்தை சேர்ந்த விமானம் ஒன்று ரஷ்யாவில் 233 பேருடன் தலைநகர் மாஸ்கோ அருகே பறந்து கொண்டிருந்தபோது அதன் மீது பறவை ஒன்று மோதியது.

எஞ்சினில் பறவை மோதியதால், விமானம் உடனடியாக தடுமாறத் தொடங்கியது. இதனை கவினத்த விமானி டேமிர் யுசுபோ, விமானத்தை லாவகமாக கொண்டு சென்றார்.

பின்னர் ஒருகட்டத்தில் சோள வயல் ஒன்றின் அருகே விமானத்தை கொண்டு சென்ற அவர், உடனே எஞ்சினை ஆஃப் செய்து விட்டு மெதுவாக தரையிறக்கத் தொடங்கினார். அப்போது பெரும் சத்தம் ஒன்று கேட்டது. இதையடுத்து கதவு திறக்கப்பட்டதும் பயணிகள் பெரும் பதற்றத்துடன் வெளியேறிச் சென்றனர்.

விமானம் வெடித்துச் சிதறாததால் அதில் இருந்த 233 பேரும் உயிர்பிழைத்தனர். 23 பேருக்கு மட்டும் காயம் ஏற்பட்டிருக்கிறது. சாமர்த்தியமாக செயல்பட்டு பயணிகள் உயிரைக் காப்பாற்றிய விமானியை ரஷ்யா அரசு பாராட்டியுள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.