இந்திய மீனவர்களை கடத்திச் சென்ற நைஜீரிய கடற்கொள்ளையர்கள்! மீட்கப் போராடும் மத்திய அரசு!!

நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் மீனவர்களை மீட்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. இதுதொடர்பாக நைஜீரிய கடற்படையின் உதவி நாடப்பட்டுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
இந்திய மீனவர்களை கடத்திச் சென்ற நைஜீரிய கடற்கொள்ளையர்கள்! மீட்கப் போராடும் மத்திய அரசு!!

மீனவர்களை மீட்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு தூதரகத்திற்கு வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உத்தரவிட்டுள்ளார்.


New Delhi: 

இந்திய மீனவர்கள் 5 பேரை நைஜீரிய கடற் கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர். அவர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. 

ஆப்பிரிக்க நாடான நைஜீரிய கடல் எல்லையில் இந்திய மீனவர்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கடற்கொள்ளையர்கள் இந்திய மீனவர்களையும் அவர்களின் MT APECUS (IMO 733810) என்ற மீன்பிடி கப்பலையும் பிடித்துச் சென்றனர். 

இதுதொடர்பாக கடத்தப்பட்ட மீனவர் சுதீப் குமார் சவுத்ரி என்பவரின் மனைவி பாக்யஸ்ரீ தாஸ், மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் ட்விட்டர் வழியே முறையிட்டார். 
 


இதனை ஏற்ற சுஷ்மா, நைஜிரியாவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு இந்திய மீனவர்களை கடத்தப்பட்டதை உறுதி செய்தார். இதன் பின்னர் அவர்களை மீட்கும் நடவடிக்கை முழு வீச்சில் நடந்து வருகிறது. 

நைஜீரியாவுக்கான இந்திய தூதர் அபை தாகூரை தொடர்பு கொண்ட சுஷ்மா, இந்திய மீனவர்களை உடனடியாக மீட்குமாறு உத்தரவிட்டிருக்கிறார். இந்த நிலையில், நைஜீரீய கடற்படை மற்றும் அந்நாட்டின் உயர் அதிகாரிகளை இந்திய தூதரகம் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. 
 

(With Inputs From ANI and IANS)சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................