மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சோதனை! - பினராயி கண்டனம்!

சோதனை நடத்திய அதிகாரி மீது ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைவர்கள் புகார் அளித்தனர்.

Thiruvananthapuram:

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சோதனை நடத்திய பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்தார்.

காவல் நிலையத்தின் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞரணி பிரிவினர் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டதையடுத்து, அவர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் மறைந்திருக்கலாம் என்று பெண் ஐபிஎஸ் அதிகாரி சைத்ரா தெரஸா ஜான் கடந்த 24-ஆம் தேதி அங்கு சோதனை நடத்தினார். அதையடுத்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைவர்கள் புகார் அளித்தனர்.

இந்நிலையில், சட்டப்பேரவையில் திங்கள்கிழமை இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது, ஜனநாயக நாட்டில் கட்சி அலுவலகங்கள் பாதுகாப்பாக செயல்பட பாதுகாப்பு அளிக்க வேண்டியது பொதுவாக காவல் துறையினரின் கடமை. 

அரசியலில் இருக்கும் சிலரின் நற்பெயரை கெடுக்க வேண்டும் என்று சிலர் ஆர்வத்துடன் உள்ளனர். இந்த மாதிரி தவறுகளை எல்லாம் களைந்தால் மட்டுமே நாடு ஜனநாயக பாதையில் செல்ல முடியும். அந்த அதிகாரி மீது துறை ரீதியான விசாரணை நடத்துமாறு மாநில காவல் துறை தலைமை அதிகாரிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
 

More News