This Article is From Dec 10, 2019

உயிர் காக்கும் விஷமுறிவு மருந்து எப்படி தயாரிக்கிறார்கள்…? தெரிஞ்சுக்கோங்க... புகைப்படத்துடன்

2018 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 29,000 பேர் பாம்பினால் கடிபட்டனர். அதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்று அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

உயிர் காக்கும் விஷமுறிவு மருந்து எப்படி தயாரிக்கிறார்கள்…?  தெரிஞ்சுக்கோங்க... புகைப்படத்துடன்

விஷமுறிவு மருந்தினை சுகாதார அமைச்சகத்தினால் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்படுகிறது

Sao Paulo:

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் பாம்பினால் பாதிக்கப்படுகின்ற பிரேசிலில் பாம்பின் நஞ்சின் மூலமாக விஷமுறிவு மருந்து தயாரிக்கப்படுகிறது. 

ஃபேபியோலா டிசோசாவும் அவருடன் பணி புரியும் சக ஊழியர்களும் புட்டாண்டன் இன்ஸ்ட்டியூட்டில்  பிடித்து வைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான நச்சுத்தன்மையுள்ள பாம்புகளின் நஞ்சினை சேகரித்து விஷமுறிவினை தயாரிக்கிறார்கள். 

பிடிக்கப்பட்ட பாம்பின் தாடைகளில் உள்ள விஷ சுரப்பிகளை மசாஜ் செய்து விஷத்தினை சேகரிக்கிறார்கள். 

5p7q48h8

தயாரிக்கப்பட்ட விஷமுறிவு மருந்தினை சுகாதார அமைச்சகத்தினால் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. 

ஜரராக உட்பட டஜன் கணக்கான விஷ பாம்பு இனங்கள் பிரேசிலின் வெப்பம் மற்றும் ஈரப்பதமான காலநிலையில் செழித்து வளர்கின்றன. 

p8um3ing

2018 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 29,000 பேர் பாம்பினால் கடிபட்டனர். அதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்று அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

பாம்புகடியினால் அதிகம் பாதிக்கப்படும் விகிதங்கள் தொலைதூர அமேசான் படுகையில் உள்ளன. அங்கு விஷமுறிவு மருத்து மருத்துவமனையை அடைய பல மணிநேரங்கள் ஆகலாம். 

ஒவ்வொரு பாம்பிலிருந்தும் மாதத்திற்கு ஒரு முறை நுட்பமான மற்றும் ஆபத்தான செயல்பாட்டின் கீழ் விஷம் பிரித்தெடுக்கப்படுகிறது. 

s00hq4jo

கொக்கி போன்ற குச்சியைப் பயன்படுத்தி, டிசா பிளாஸ்டிக் பெட்டியில் அடைக்கப்பட்டிருக்கும் பாம்பின் ஒன்றை எடுத்து கார்பன் டை ஆக்ஸைடு உள்ள ட்ரம்மில் வைக்கிறார். வைத்த சில நொடிகளில் பாம்பு தூக்கத்தில் ஆழ்கிறது. 

பின்னர் பாம்பு தூக்கத்திலிருந்து எழுவதற்கு முன் பாதுகாப்பாக விஷத்தினை எடுக்கிறார்.  விஷத்தினை எடுத்து முடித்ததும் பாம்பின் எடை மற்றும் நீளத்தை பதிவு செய்கிறார். 

மக்களுக்கு பாம்பின் மீது பயம் இருப்பது நல்லது. அப்போது தான் அவர்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள் என்று கூறுகிறார். 

புட்டாண்டன் இன்ஸ்ட்டியூட்டின் மேலாளர் ஃபேன் ஹூய் வென், அனைத்து விதமான விஷ முறிவுகளை 2,50,000 எண்ணிக்கையில் 10-15 மி.லி அளவில் தயாரிக்கிறது. 

லத்தீன் அமெரிக்காவின் பல நாடுகளுக்கு பிரேசில் விஷமுறிவு மருந்தினை வழங்குகிறது. 

உலக சுகாதார அமைப்பு படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5.4 மில்லியன் மக்கள் பாம்புகளால் கடிக்கப்படுகிறார்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  விரைவில் இந்நிறுவனம் விஷமுறிவு மருத்தினை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவுள்ளது. 

.