‘பட்டாணிக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா..?’- நீங்களே படத்தைப் பாருங்க #ViralPic

இந்தப் பிழையானது பல நெட்டிசன்களுக்குத் தூக்கத்தை இழக்கச் செய்துள்ளது. 

 Share
EMAIL
PRINT
COMMENTS
‘பட்டாணிக்கு இவ்வளவு பெரிய அக்கப்போரா..?’- நீங்களே படத்தைப் பாருங்க #ViralPic

“எனக்கு இந்தப் படத்தில் இருக்கும் மிகப் பெரிய பிரச்னை..."


பட்டாணி. ஒரு பட்டாணிக் குவியலின் படத்தினால் நெட்டிசன்கள் அல்லோலப்பட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் ட்விட்டர் மற்றும் ரெடிட் சமூக வலைதளங்களில், உணவகம் ஒன்றில் இருந்த படம் பகிரப்பட்டது. அந்தப் படத்தில் மஞ்சள் நிறத் தட்டில் ஆப்பிள் பைய், ஃப்ரெஞ்சு ஃப்ரைஸ் உள்ளிட்ட உணவுகளுடன் பட்டாணிக் குவியலும் இருந்தது. அது ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட படம். அந்தப் படத்தில் இருந்த முக்கியமான பிழை, எடிட்டர், பட்டாணிக் குவியலை தலைகீழாக வைத்துவிட்டார். இந்தப் பிழையானது பல நெட்டிசன்களுக்குத் தூக்கத்தை இழக்கச் செய்துள்ளது. 

The peas are upside down from r/mildlyinfuriating

சிலர், இந்தப் படத்தை எடிட் செய்தவரை விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர். சிலரோ கேலி செய்ய ஆரம்பித்துவிட்டனர். இன்னும் சிலரோ, இந்தப் படத்தைப் பார்த்தால் கண்கள் வலிக்கிறது என்று புகார் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். 

“எனக்கு இந்தப் படத்தில் இருக்கும் மிகப் பெரிய பிரச்னை, மிகவும் எளிதாக ஃபோட்டோஷாப் மூலம், இதை சரி செய்திருக்க முடியும். அதைக் கூடத் தெரியாமல் ஒருவர் எப்படி எடிட் செய்வார்” என்று ஒரு ட்விட்டர் பயனர் வினவியுள்ளார். 

“பட்டாணி எப்படி இப்படி இருக்கும். ஓ மை காட்” என்று இன்னொருவர் பொங்கியுள்ளார். 

Click for more trending news
சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................