கார்கில் வெற்றியின் 20வது ஆண்டு விழா : புகைப்படத் தொகுப்பு

Updated: July 26, 2019 11:22 IST

இந்திய ராணுவம் வெள்ளியன்று கார்கில் போர் வெற்றியின் 20 வது ஆண்டு நினைவு நாளை நினைவு கூர்ந்தது

கார்கில் வெற்றியின் 20வது ஆண்டு நினைவு நாள் : புகைப்படத் தொகுப்பு
பிரதமர் நரேந்திர மோடி போர் நடைபெற்ற சமயத்தில் கார்கிலுக்கு சென்ற போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார். 1999இல் ஜம்மு - காஷ்மீர் மற்றும் இமாசல பிரதேசத்தில் பாஜவுக்காக பணியாற்றி இருந்ததாக பிரதமர் கூறினார். 'கார்கில் வருகை புரிந்தது மற்றும் வீரர்களுடனான தொடர்புகள் மறக்க முடியாதவை' என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.
கார்கில் வெற்றியின் 20வது ஆண்டு நினைவு நாள் : புகைப்படத் தொகுப்பு
அகில இந்திய மகிலா காங்கிரஸ் போரின் போது விமான லெப்டினண்ட் குஞ்சன் சக்சேனா ஆற்றிய பங்களிப்பினை நினைவு கூர்ந்தது. 'கார்கிலின் போர்க்களத்தில் தடம் பதித்த பெண் விமானி. குஞ்சனின் ஹெலிகாப்டர் ஒரு பாகிஸ்தான் ஏவுகணையால் சுடப்பட்டு, அது ஒரு மலையில் மோதியது.' என்று ட்விட் செய்திருந்தது.
கார்கில் வெற்றியின் 20வது ஆண்டு நினைவு நாள் : புகைப்படத் தொகுப்பு
கார்கில் விஜய் திவாஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய ராணுவம் நிகழ்த்திய ‘டேர் டெவில்ஸ்' மோட்டார் சைக்கிளில் நடத்திய சாகசம்.
கார்கில் வெற்றியின் 20வது ஆண்டு நினைவு நாள் : புகைப்படத் தொகுப்பு
எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 2019 ஜூலை 23 அன்று ஶ்ரீநகரில் எல்லை பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்குள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
கார்கில் வெற்றியின் 20வது ஆண்டு நினைவு நாள் : புகைப்படத் தொகுப்பு
கார்கில் போரினால் கொல்லப்பட்ட வீரர்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், புது தில்லியில் தேசிய போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்தினார்.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com