சத்தீஸ்கர் : மாவோயிஸ்ட் மிரட்டலுக்கு மத்தியில் 70% வாக்குப்பதிவு

Updated: November 12, 2018 19:45 IST
18 தொகுதிகளில் வாக்குப்பதிவு மிகவும் மெதுவாக தொடங்கியது. முதல் சில மணிநேரங்களில் 14 சதவீதம் மட்டுமே பதிவான நிலையில், பின்னர் கணிசமாக உயர்ந்து 70% - ஆக நிறைவு பெற்றது.
சத்தீஸ்கர் : மாவோயிஸ்ட் மிரட்டலுக்கு மத்தியில் 70% வாக்குப்பதிவு
பஸ்தார் பகுதியில் 9 தொகுதிகள், ராஜ்நத்காவோனில் ஒன்று ஆகிய 10 தொகுதிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கும், மற்ற 8 தொகுதிகளில் காலை 8 மணிக்கும் தொடங்கியது.
சத்தீஸ்கர் : மாவோயிஸ்ட் மிரட்டலுக்கு மத்தியில் 70% வாக்குப்பதிவு
தேர்தல் நடந்த 18 தொகுதிகளில் 1.25 லட்சம் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியை மேறகொண்டனர். பஸ்தார், கங்கெர், சுக்மா, பீஜப்பூர், தண்டேவாடா, நாராயண்பூர், கொண்டகாவோன் மற்றும் ராஜ்நந்த்காவோன் ஆகியவை மாவோயிஸ்ட் பாதிப்பு பகுதிகள் என்பதால் இந்த பாதுகாப்பு போடப்பட்டது.
சத்தீஸ்கர் : மாவோயிஸ்ட் மிரட்டலுக்கு மத்தியில் 70% வாக்குப்பதிவு
தண்டேவாடா மாவட்டத்தில் காலைநேரத்தின்போது வெடிகுண்டு வெடித்தது. தேர்தலை புறக்கணிக்க மாவோயிஸ்டுகள் விடுத்த எச்சரிக்கையாக இது பார்க்கப்பட்டது.
சத்தீஸ்கர் : மாவோயிஸ்ட் மிரட்டலுக்கு மத்தியில் 70% வாக்குப்பதிவு
தோர்னாபால் என்ற பகுதியில் விஷ்வாஸ் என்ற 100-வயது மூதாட்டி தனது மகன் மற்றும் கைத்தடி ஒன்றின் உதவியால் வாக்களித்து விட்டு சென்றார். விஷ்வாஸ் என்ற பெயருக்கு நம்பிக்கை என்று பொருள்.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................