This Article is From Apr 11, 2019

2019 மக்களவை தேர்தல் துவக்கம் : 10 முக்கிய தகவல்கள்

நான்கு மாநிலங்களில் சட்டசபை தேர்தலும் நடக்கிறது

மக்களவை தேர்தலும் சட்டசபை தேர்தலும் நடக்கிறது

New Delhi:

1. ஆந்திர பிரதேசம், அருணாச்சல் பிரதேசம், அசாம், பிகார், ஜம்மு மற்றும் காஷ்மீர், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ஒடிசா, சிக்கிம், திர்புரா, உத்திர பிரதேசம், மேற்கு வங்காளம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், இலட்சத்தீவுகள், சத்தீஸ்கர், உத்திரகண்ட், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இன்று வாக்குபதிவு நடக்கவிருக்கிறது.

2.ஆந்திர பிரதேசம், சிக்கிம், அருணாச்சல் பிரதேசம், ஒடிசா ஆகிய  மாநிலங்களில் சட்டசபை தேர்தலும் நடக்கிறது.

3.உத்திர பிரதேசத்தில் இருக்கும் 80 தொகுதிகளில் முதல் கட்டமாக 8 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. இதில் முக்கிய தொகுதிகள் சகரண்பூர், கைரானா, கசியாபாத், பாக்பாத் மற்றும் கவுதம் புத்தா நகர் ஆகும். பாஜக, காங்கிரஸ், மாயாவதி – அகிலேஷ் யாதவ் – அஜித் சிங் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

4.மத்திய அமைச்சர்களான நிதின் கட்காரி (நாக்பூர்), கிரேன் ரிஜிஜு (அருணாசல் மேற்கு), ஜெனரல் விகே.சிங் (கசியாபாத்), சத்யபால் சிங் (பாக்பாத்), மகேஷ் சர்மா (கவுதம் புத்தா நகர்) ஆகியோர் இன்று வேட்பாளர்களாக களமிறங்குகிறார்கள்

5;தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன், விவசாயிகள் மற்றும் கிராமம் முன்னேற்றத்திற்கு 20 லட்சம் கோடி ரூபாயும் வேலைவாய்ப்புகளுக்கு 100 லட்சம் கோடி ரூபாயும் செலவிட இருப்பதாக பாஜக தெரிவித்தது.

6தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இன்னொரு முறை பிரதமராக வேண்டும் என மோடி கூறினார்.

7.காங்கிரஸ் கட்சியின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக பார்க்கப்படுவது, ஏழைகளுக்கு வருடம் 72 ஆயிரம் ரூபாய் வழங்க இருப்பது தான்.

8. தேர்தல் கருத்து கணிப்புகளில், பிரதமர் மோடி பிரபலமாக இருந்தாலும் அவருடைய அரசானது வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மற்றும் விவசாய பிரிவில் தோற்று விட்டதாகவே கூறப்படுகிறது. மேலும் மாட்டு இரைச்சி தொடர்பான விவகாரத்திலும் பிரதமர் விமர்சிக்கப்பட்டார்.

9.கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏழு வடகிழக்கு மாநிலங்கள் உட்பட 12 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது. இதில் உத்திரபிரதேசமும் அடங்கும்.

10.ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா ஆகிய மாநிலங்களை காங்கிரஸ் கட்சி தனக்குரியதாக்கியது.

.