86 ரூபாயைத் தாண்டிய பெட்ரோல் விலை - விலை உயர்வுக்கு காரணம் என்ன?

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தடையால், உற்பத்தி குறையும் என்பதால் விலை அதிகரித்துள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
86 ரூபாயைத் தாண்டிய பெட்ரோல் விலை - விலை உயர்வுக்கு காரணம் என்ன?
New Delhi: 

பெட்ரோல் டீசல் விலை வரலாற்றில் இல்லாத அளவு உச்சத்தில் இருக்கிறது. இந்தியாவிலேயே மிக அதிகமாக மும்பையில் பெட்ரோல் விலை 86.56 ரூபாயாகவும், டீசல் விலை 75.54 ரூபாயாகவும் உள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வும், ரூபாய் மதிப்பும் இதற்கு காரணம் என பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் தெரிவித்துள்ளார்.

விலை உயர்வு குறித்து 10 தகவல்கள்:

  1. “சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வும், ரூபாய் மதிப்பும் இதற்கு காரணம்.அது பற்றி அரசு பரிசீலித்து வருகிறது” என பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் தெரிவித்துள்ளார்.
  2. டெல்லியில் இன்று பெட்ரோல் விலை 31 பைசாவும், டீசல் விலை 39 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. தினமும் விலை மாற்றம் செய்யும் நடைமுறை அமலுக்கு வந்ததில் இருந்து, இது அதிகபட்ச உயர்வாகும். கொல்கத்தாவில் பெட்ரோல் விலை 82.06 ரூபாயும், டீசல் விலை 82.24 ரூபாயாகவும் உள்ளது.
  3. இதற்கு முன் மே-28-ம் தேதி 78.43 ரூபாயாக இருந்ததே அதிகபட்சமாக இருந்தது. அன்று மும்பையில் பெட்ரோல் விலை 86.24 ரூபாயாக இருந்தது.
  4. கச்சா எண்ணெய் விலை கடந்த 15 நாட்களில் 7 டாலர்கள் அதிகரித்துள்ளது. ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தடையால், உற்பத்தி குறையும் என்பதால் விலை அதிகரித்துள்ளது.
  5. விலை உயர்வுக்கு மற்றொரு காரணம் ரூபாய் மதிப்பு சரிவு. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 71 ரூபாய் என்ற வரலாற்று சரிவை பெற்றுள்ளது. ஒரு மாதத்தில் மட்டும் 2.50 ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது.
  6. ரூபாய் மதிப்பு சரிவு, சி.என்.ஜி எரிவாயு மற்றும் பி.என்.ஜி எரிவாயு விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
  7. ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் பெட்ரோல் விலை 2 ரூபாய் அதிகரித்துள்ளது. டீசல் விலை 2.42 ரூபாய் அதிகரித்துள்ளது.
  8. டீசல் விலை உயர்வை கண்டித்து 75000 தமிழக மீன்வர்கள் வார இறுதியில் மீன்பிடிக்க செல்லவில்லை. பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்கு கீழ் கொண்டு வரவும் அவர்கள் வலியுறுத்தினர்.
  9. பெட்ரோல் மீதான வாட் வரி மும்பையில் 21% ஆக இருக்கிறது. இந்தியாவிலேயே டெல்லியில் தான் பெட்ரோல் டீசல் விலை மீதான வாட் வரி குறைவாக இருக்கிறது.
  10. ஆகஸ்ட் மாதம், எதிர்க்கட்சிகளும், தொழில் நிறுவன கூட்டமைப்புகளும் கலால் வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால், அவ்வாறு செய்தால், அரசுக்கு வரி வருவாய் குறையும். எண்ணெய் நிறுவனங்களை நஷ்டத்தை ஏற்கச் சொல்வதே ஒரே வழி.


சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................