பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வித் தேர்வு முடிவுகள் அறிவிப்பு!

கடந்த பிப்ரவரி மாதம் பெரியார் பல்கலைக்கழகம் நடத்திய ப்ரைட் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன.

 Share
EMAIL
PRINT
COMMENTS
பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வித் தேர்வு முடிவுகள் அறிவிப்பு!
New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. சேலத்தில் அமைந்துள்ளது பெரியார் பல்கலைக்கழகம்
  2. இப்பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வியே, ப்ரைட் என்றழைக்கப்படுகிறது
  3. கடந்த 2001 ஆண்டு முதல் இந்த ப்ரைட் முறை செயல்பாட்டில் இருக்கிறது
கடந்த பிப்ரவரி மாதம் பெரியார் பல்கலைக்கழகம் நடத்திய ப்ரைட் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன.

பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இத்தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது தேர்வு பதிவு எண் கொண்டு தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பெரியார் பல்கலைக்கழகத்துக்கான தொலைதூரக் கல்விக்குத் தேர்ந்தெடுப்பதற்காக விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு நடத்தப்படுவது தான் ‘ப்ரைட்’ தேர்வுகள்.

பெரியார் பல்கலைக்கழகம், சமூக சீர்திருத்தவாதி பெரியாரின் நினைவாக பெயர் சூட்டப்பட்ட பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி முறையைத் தான் அப்பல்கலைக்கழகம் ‘ப்ரைட்’ எனச் சுருக்கி அழைத்து வருகிறது. கடந்த 2001- 2002 கல்வி ஆண்டில் இத்தொலைதூரக் கல்வித் திட்டம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அறிமுகம் ஆனது. பல்வேறு விதமான இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகள் இங்கு பயிற்றுவிக்கப் படுகின்றன.

தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள,
www.periyaruniversity.ac.in என்ற இணைய தள முகவ்ரிக்கு முதலில் செல்லவும்.

பின்னர் அத்தளத்தில் உள்ள தேர்வு முடிவுகள் என்ற லிங்க்கைத் தேர்ந்தெடுக்கவும்.

அதில் மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட வேண்டும்.

பின்னர் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளைப் பார்க்கலாம்.

இறுதியாக உங்களது மதிப்பெண் பட்டியலை டவுன்லோடு செய்து பிரின்ட் எடுத்துக் கொள்ளலாம்.

கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற வேண்டிய இந்தத் தேர்வு தள்ளிப்போனதால் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. மேலும், 2018 ஜனவரி மாதம் நடைபெற்ற தேர்வு முடிவுகளும் வெளியிடப்படுள்ளன. இந்தப் புதிய கல்வி ஆண்டுக்கான எம்ஃபில் மற்றும் முனைவர் பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்களை வரவேற்பதாகவும் பெரியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
 
 
 
 
 
 

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................