This Article is From Dec 07, 2018

2 டாலர் தயிர் பாக்கெட்டை கண்டுபிடிக்க 98 டாலர் செலவு செய்த காவல்துறை.

மேலும் மரபணு சோதணையில் அதை திருடியது புகார் கொடுத்த பெண்ணின் அறையில் வசிப்பவர் தான் என்பதை இறுதியில் கண்டுபிடித்தனர்.

2 டாலர் தயிர் பாக்கெட்டை கண்டுபிடிக்க 98 டாலர் செலவு செய்த காவல்துறை.

ஒரு தயிர் பாக்கெட்டை கண்டுபிடிக்க இவ்வளவு செலவா

தாய்வானைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த வினோத புகாரை விசாரிப்பதற்க்காக, 98$ செலவுசெய்த போலீசார் மீது மக்கள் கோபம் அடைந்துள்ளனர்.

தாய்பெய் நகரில் உள்ள சீன கலாசார பல்கலைகழகத்தில் படித்து வந்த பெண் ஒருவர், தனது 2$ மதிப்புள்ள தயிர் பாக்கெட்டை (Yogurt) அவர் வசிக்கும் அறையில் வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய அவர், தன்னுடைய தயிர் பாக்கெட்டை காணவில்லை என்றவுடன் தன்னுடன் வசிக்கும் நண்பர்களிடம் விசாரித்துள்ளார். பலன் ஏதும் கிடைக்காத நிலையில் இந்ந பிரச்சனைக்கு தீர்வு காண போலீசாரிடம் புகார் அளிக்க, இச்சம்பவத்தை விசாரிக்க  போலீசார் முடிவெடுத்து நடத்திய சோதனையில் கிடைத்த தயிர்பாக்கெட்டில்  கைவரல் ரேகை ஏதும் கிடைக்காததால் மரபணு சோதனை நடத்த முடிவெடுத்தனர்.

மரபணு சோதனை நடத்த சுமார் 98$ செலவாகும் நிலையில் புகார் அளித்த பெண் மற்றும் அவருடன் வசிக்கும் மற்ற 5 நபர்களுக்கும் மரபணு சோதனை நடத்த போலீஸ் தரப்பினர் முடிவெடுத்தனர்.

தங்களது வரிப்பணத்தை இது போன்ற சிறு காரியங்ககளுக்காக வீண் செய்ததால் ஊர் மக்கள் மிகவும் கோபமடைந்தனர். மேலும் இந்த சின்ன புகாருக்காக இவ்வளவு பணம் வீண் செய்ததற்க்கு பதிலாக வேறொரு தயிர் பாக்கெட்டையே வாங்கிருந்தால் இவ்வளவு செலவாகியிருக்காது என்பது பலரது கருத்தாக உள்ளது

மேலும் மரபணு சோதணையில் அதை திருடியது புகார் கொடுத்த பெண்ணின் அறையில் வசிப்பவர் தான் என்பதை இறுதியில் கண்டுபிடித்தனர்.

 

Click for more trending news


.