வெற்றியை மக்கள் முடிவு செய்திருப்பார்கள்: மு.க.அழகிரி பேட்டி

யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதை மக்கள் முடிவு செய்திருப்பார்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

வெற்றியை மக்கள் முடிவு செய்திருப்பார்கள்: மு.க.அழகிரி பேட்டி

மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு தமிழகம், புதுச்சேரியில் 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 19 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கியது.

தமிழகத்தில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் 66,702 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இதில், தமிழகத்தின் 8,293 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் மக்கள் காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

அனைத்து இடங்களிலும் மக்கள் வாக்களிக்க தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன. பிற்பகல் 1 மணி
நிலவரப்படி, 39.49% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எனினும், பல வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால், மக்கள்
நீண்ட வரிசையில் காத்திருந்து வருகின்றனர்.

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மதுரை டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் தனது வாக்கினை செலுத்தினார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், யாருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்ற கேள்விக்கு? அதனை மக்கள் முடிவு செய்திருப்பார்கள் என்று பதில் அளித்து விடைபெற்றார்.

மதுரை தொகுதியில் திமுகவின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக எழுத்தாளர் சு.வெங்கடேசன் களமிறக்கப்பட்டுள்ளார்.

More News