2 வாழைப்பழம் 442 ரூபாயா, இது போன்ற உங்களின் 'ராகுல் போஸ் தருணம்'?

'ராகுல் போஸ் தருணங்கள்', என குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து ட்வீட்களையும், ட்விட்டர் 'மிகவும் பொழுதுபோக்கு' பட்டியலில் சேர்த்துள்ளது.

2 வாழைப்பழம் 442 ரூபாயா, இது போன்ற உங்களின் 'ராகுல் போஸ் தருணம்'?

சொந்த 'ராகுல் போஸ் தருணங்கள்' ட்விட்டரில் பகிரும் மக்கள்

கடந்த திங்கட்கிழமையன்று, நடிகர் ராகுல் போஸ் ஒரு சொகுசு ஹோட்டலில் வாழைப்பழத்திற்காக வசூலிக்கப்பட்ட தொகை குறித்து புகார் அளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த தில் தடக்னே டோ (Dil Dhadakne Do) நடிகருக்கு ஒரு சொகுசு ஹோட்டலில் இரண்டு வாழைப்பழங்களுக்கு 442 ரூபாய் வசூலிக்கப்பட்டது என்பது டிவிட்டரை சிறிப்பில் மூள்கவைத்த அதே நேரம் கோபப்படுத்திய ஒரு செய்தி. 

இவர் புகார் அளித்த மாதிரியான வீடியோ வைரலானதை தொடர்ந்து, இப்போது ​​அவரது வீடியோவை பார்த்த மக்கள் வெவ்வேறு விஷயங்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவங்களை டிவிட்டரில் 'ராகுல் போஸ் தருணங்கள்' (Rahul Bose Moments) என பகிர்ந்த வண்ணம் உள்ளனர். 

'ராகுல் போஸ் தருணங்கள்', என குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து ட்வீட்களையும், ட்விட்டர் 'மிகவும் பொழுதுபோக்கு' பட்டியலில் சேர்த்துள்ளது. 

அந்த ட்வீட்களை பார்ப்பதற்கு முன், நீங்கள் ஒருவேளை தவறவிட்டிருந்தால், ராகுல் போஸின் வைரலாகி கொண்டிருக்கும் வீடியோவைப் பாருங்கள்:

இந்த வீடியோவை பார்த்த மக்கள் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்ட தங்களின் சொந்த நகைச்சுவையான அனுபவங்களை ட்விட்டரில் பகிர்ந்த வண்னம் உள்ளனர். அவற்றில் சிலவற்றை கீழே பாருங்கள்:

உங்களுக்கும் இதே போன்று  'ராகுல் போஸ் தருணம்' ஏற்பட்டுள்ளதா, கமென்ட் பகுதியில் தெரிவுயுங்கள்!

Click for more trending news