மாநிலங்களவை ஜூன் 20 தொடங்கி ஜூலை 26 வரை நடைபெறுகிறது!!

மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவியேற்பு முதல் 2 நாட்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
மாநிலங்களவை ஜூன் 20 தொடங்கி ஜூலை 26 வரை நடைபெறுகிறது!!

மக்களவை கூட்டத் தொடர் ஜூன் 17-ம்தேதி தொடங்குகிறது.


New Delhi: 

மாநிலங்களவை ஜூன் 20-ம்தேதி தொடங்கி ஜூலை 26-ம்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மாநிலங்களவை செயலர் தீபக் வர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மாநிலங்களவை கூட்டத்தை ஜூன் 20-ம்தேதி கூட்டுமாறு குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார். ஜூலை 26-ம் தேதி வெள்ளிக்கிழமையுடன் மாநிலங்களவை கூட்டத் தொடர் முடிகிறது' என்று கூறப்பட்டுள்ளது. 

மக்களவையின் முதல் கூட்டத் தொடர் ஜூன் 17-ம்தேதி தொடங்குகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கூட்டத் தொடர் தொடங்கிய முதல் 2 நாட்களில் பதவியேற்றுக் கொள்கின்றனர்.

நாடாளுமன்றத்தின் 2 அவைகளையும் சேர்த்து ஜூன் 20-ம்தேதி கூட்டம் நடைபெறுகிறது. இதில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். இந்த கூட்டத் தொடரின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 


 



சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................