எம்.பி.யாக. பதவியேற்ற பின்னர் கையெழுத்திடாமல் சென்ற ராகுல் - நினைவூட்டிய ராஜ்நாத் சிங்!!

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பு இன்னும் 2 நாட்களுக்கு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இன்று எம்.பி.யாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

New Delhi:

வயநாடு எம்.பி.யாக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ராகுல் காந்தி அதற்கான சான்றிதழில் கையெழுத்திடாமல் நடையைக் கட்டினார். இதனைப் பார்த்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கையெழுத்திட்டுச் செல்லுமாறு ராகுலுக்கு நினைவூட்டினார். இது அவை உறுப்பினர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று முறைப்படி எம்.பி.க்களாக பொறுப்பேற்று வருகிறார்கள். இன்றைய அவையின் தொடக்கத்தில் தற்காலிக சபாநாயகராக வீரேந்திர குமாருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன்பின்னர் எம்.பி.க்கள் ஒவ்வொருவரும் சபாநாயகர் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டனர். 

இன்று முக்கியமான அவை அலுவல் இருந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவைக்கு முற்பகலின்போது வரவில்லை. இதனை விசாரித்த உறுப்பினர்கள் ராகுல் எங்கே என்று கேட்கத் தொடங்கினர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. 
 

11p6d7ug


இந்த நிலையில் மதியம் அவைக்கு வந்த ராகுல் காந்தி எம்.பியாக பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டார். இதன்பின்னர் அதற்கான சான்றிதழில் கையெழுத்திடாமல் விறுவிறுவென நடையைக் கட்டினார். இதனை கவனித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கையெழுத்திட்டு செல்லுமாறு ராகுலை கேட்டுக் கொண்டார். 
 

இதன் பின்னர் திரும்பி வந்த ராகுல் எம்.பி.க்கான பொறுப்பு ஏற்பு சான்றிதழில் கையெழுத்திட்டார். இந்த மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி வயநாடு மற்றும்  அமேதி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் சொந்த தொகுதியான அமேதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 

இருப்பினும் வயநாடு தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்று மக்களவைக்கு சென்றிருக்கிறார். காங்கிரஸ் கட்சி மக்களவை எதிர்க்கட்சி தலைவரை இதுவரையில் அறிவிக்கவில்லை. அந்த பொறுப்பை ராகுல் காந்தி ஏற்பார் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உள்ளனர். 

More News