டெல்லி விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட RDX பையினால் பரபரப்பு…!

சிஐஎஸ்எஃப் உதவியுடன் பை அகற்றப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. பை இன்னும் திறக்கப்படவில்லை. அதற்குள் சில மின்சார கம்பிகள் இருப்பது போல் தெரிகிறது.

டெல்லி விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட  RDX  பையினால் பரபரப்பு…!

உயர் பாதுகாப்பு வளாகத்திற்கு வெளியே உள்ள சாலைகளும் தடுக்கப்பட்டன. (File photo)

New Delhi:

டெல்லி விமான நிலையத்தின் சர்வதேச முனையத்தில் அதிகாலை சந்தேகத்திற்கிடமான பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியது. 

அதிகாலை 1 மணியளவில் ஒரு அழைப்பு ஒன்று வந்ததாக  டெல்லி காவல்துறை தெரிவித்தது. அதைத் தொடர்ந்து டெர்மினல் -3இல் பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பையில் ஆர்டிஎக்ஸ்க்கான உள்ளடக்கங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு இந்த வெடிபொருள் கண்காணிக்கப்படும். 

மோப்ப நாய்களும் இந்த விசாரணையின் போது அழைத்து வரப்பட்டன.

சிஐஎஸ்எஃப் உதவியுடன் பை அகற்றப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. பை இன்னும் திறக்கப்படவில்லை. அதற்குள் சில மின்சார கம்பிகள் இருப்பது போல் தெரிகிறது. விமான நிலைய வளாகத்தின் பாதுகாப்பை அதிகரித்துள்ளோம்” என்று துணை ஆணையர் சஞ்சய் பாட்டியா  தெரிவித்தார். இந்த சம்பவம் சிறிது நேரம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது என்று சில விமான நிறுவனங்களின் வட்டாரங்கள் தெரிவித்தன.

விமான நிலைய வளாகத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது வெளியே உள்ள சாலைகளும் தடுக்கப்பட்டன.

More News