This Article is From Dec 10, 2019

எல்லையோர கிராமங்களை குறிவைத்து தாக்கும் பாகிஸ்தான் ராணுவம்! இந்தியா தக்க பதிலடி!!

பாலகோட் மற்றும் ஷாஹ்பூர் செக்டர்கள் வழியே செல்லும் எல்லை கட்டுப்பாடு பகுதியில் உள்ள கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் விடிய விடிய துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதனால் கிராம மக்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

எல்லையோர கிராமங்களை குறிவைத்து தாக்கும் பாகிஸ்தான் ராணுவம்! இந்தியா தக்க பதிலடி!!

பாலகோட் வழியே செல்லும் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம்தான் முதலில் தாக்குதல் நடத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Jammu:

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் வழியே செல்லும் எல்லைக் கோட்டில் அமைந்துள்ள கிராமங்களை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் விடிய விடிய தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த சம்பவத்தால், எல்லையோர கிராம மக்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஷாஹ்பூர் மற்றும் பாலக்கோட்டின் வழியே செல்லும் எல்லைப் பகுதியை ஒட்டி, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் விடிய விடிய தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக பாதுகாப்புத்துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 'பாகிஸ்தான் தான் முதலில் தாக்குதலை நடத்தியது. சிறிய ரக ஆயுதங்கள், மோர்ட்டார் குண்டுகள் மூலமாக பாலகோட்டின் எல்லைப் பகுதியில் தாக்குதல் நடந்துள்ளது. 

இதற்கு இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடியை கொடுத்துள்ளனர். 

ஷாஹ்பூர் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் கிராமங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. 120 எம்.எம். அளவு கொண்ட மோர்ட்டார் குண்டுகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தால் எல்லையோர கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் முகம்மது சவுகத் என்ற கிராமவாசி காயம் அடைந்திருக்கிறார். நேற்றிரவு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்' என்று தெரிவித்தார். 

பூஞ்ச் மாவட்டத்தில் மட்டும் பாகிஸ்தான் ராணுவம் நேற்று 3 முறை எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

.