This Article is From Sep 21, 2019

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்!!

இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த 2003-ல் அமைதி உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. இதனை பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து மீறி வருவது குறிப்பிடத்தக்கது. 

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்!!

இந்த ஆண்டில் மட்டும் பாகிஸ்தான் ராணுவம் 2 ஆயிரத்திற்கும் அதிகமான முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியிருக்கிறது

Jammu:

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீற தாக்குதல் நடத்தியுள்ளனர். எல்லைக் கோடு வழியே அமைந்திருக்கும் பூஞ்ச் மற்றும் ரஜவ்ரி மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. 

சிறிய ரக ஆயுதங்கள், மோர்ட்டார் ரக ராக்கெட்டுகள் உள்ளிட்டவை இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பூஞ்ச் மாவட்டத்தின் பாலகோட் செக்டார், ரஜவ்ரியின் நவ்ஷெரா ஆகிய இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீறல்களுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. 

நவ்ஷெரா செக்டரில் நேற்றிரவு 8 மணிக்கு தொடங்கிய அத்துமீறல் இரவு 10 மணி வரை நீடித்துள்ளது. இதேபோன்று பாலகோட்டில் நள்ளிரவு 11.45-க்கு தொடங்கிய பாகிஸ்தானின் தாக்குதல் நள்ளிரவு 2 மணி வரைக்கும் நடந்துள்ளது. இந்த சம்பவத்தின்போது உயிரிழப்புகள் குறித்த எந்த தகவலும் வெளிவரவில்லை. 

இந்த ஆண்டில் மட்டும் பாகிஸ்தான் ராணுவம் 2 ஆயிரத்திற்கும் அதிகமான முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதில் 21 இந்தியர்கள் உயிரிழந்துள்ளார்கள். 

இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த 2003-ல் அமைதி உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. இதனை பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து மீறி வருவது குறிப்பிடத்தக்கது. 

.