This Article is From Feb 17, 2019

பாகிஸ்தான் சதி : ஈரானிலும் தாக்குதல் நடத்தி 27 கமாண்டோ வீரர்களை கொன்ற தீவிரவாதிகள்

ஈரான் – பாகிஸ்தான் எல்லையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலின்போது ஈரான் ராணுவத்தின் கமாண்டோ வீரர்கள் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் சதி : ஈரானிலும் தாக்குதல் நடத்தி 27 கமாண்டோ வீரர்களை கொன்ற தீவிரவாதிகள்

வீரர்கள் மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தானை ஈரான் கண்டித்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • ஈரான் கமாண்டோக்கள் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர்
  • தீவிரவாதிகளை தூண்டி விடுவதற்கு பாகிஸ்தான் அனுபவிக்கும் என்கிறது ஈரான்
  • வழக்கம்போல தனக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பில்லை என்கிறது பாக்.
Dubai:

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் ஈரானில் தாக்குதல் நடத்தி கமாண்டோ வீரர்கள் 27 பேரை கொன்றுள்ளனர். இந்த விவகாரத்தில் பாகிஸ்தானை ஈரான் கண்டித்துள்ளது.

பாகிஸ்தான் – ஈரான் எல்லைப் பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஈரானைப் பொறுத்தளவில் அந்நாட்டை சுற்றிலும் எதிரிகள் உள்ளனர்.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் ஈரானுக்கு எதிரான செயல்பாட்டில் இருக்கின்றன. இந்த இரு நாடுகளும் பாகிஸ்தானுடன் நல்ல நட்பு பாராட்டி வருகிறது.

அந்த வகையில் பாகிஸ்தான் மூலமாக ஈரானில் இந்த தாக்குல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தானை ஈரான் ராணுவ தலைமை தளபதி முகம்மது அலி ஜாபரி கண்டித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-

எதற்காக தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் கொடுக்கிறது?. ஈரான் வீரர்களை கொன்றதற்காக உரிய விலையை பாகிஸ்தான் ராணுவம் கொடுக்க நேரிடும். கடந்த ஆண்டில் மட்டும் 7 தற்கொலைப்படை தாக்குதல்களை தடுத்து நிறுத்தியுள்ளோம்.

சவுதி மற்றும் ஐக்கிய அரபு அமீரத்திற்கு தெரியும் ஈரான் பொறுமை இழந்து விட்டது என்று. இதற்கு பதிலடி கொடுப்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி துணை ராணுவத்தினர் 40 பேரை கொன்றுள்ளனர். இதேபோன்று ஈரானிலும் பாகிஸ்தான் வாலை ஆட்டி வருகிறது. இதற்கு பழிதீர்ப்போம் என ஈரான் எச்சரித்திருக்கிறது.

.