மிஸ் இங்கிலாந்து இறுதி போட்டியில் 'ஹிஜாப்' அணிந்து பங்கேற்கும் போட்டியாளர்!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் அழகிப் போட்டியில், சாரா இஃப்தேகர் என்ற 20 வயது இஸ்லாமிய பெண் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்

 Share
EMAIL
PRINT
COMMENTS
மிஸ் இங்கிலாந்து இறுதி போட்டியில் 'ஹிஜாப்' அணிந்து பங்கேற்கும் போட்டியாளர்!
London: 

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் அழகிப் போட்டியில், சாரா இஃப்தேகர் என்ற 20 வயது இஸ்லாமிய பெண் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். அதில், ஹிஜாப் எனப்படும் முக்காடு அணிந்தபடி பங்கேற்க அவர் முடிவு செய்துள்ளார். பாகிஸ்தான் நாட்டை பூர்வீகமாக கொண்ட சாரா, இங்கிலாந்து அழகி போட்டியில் வரலாறு படைக்க உள்ளார்.

அழகி போட்டியின் தகுதி சுற்றுகளில், 'ஹிஜாப்' அணிந்து, ஏற்கெனவே போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள நிலையில் இறுதி போட்டியில் ஹிஜாப்புடன் பெண் ஒருவர் கலந்து கொள்வது இதுவே முதல்முறை ஆகும்.

இது குறித்து பேசிய சட்ட கல்லூரி மாணவியான சாரா, 'எடை, இனம், நிறம், உருவத்திற்கு அப்பாற்பட்டு, ஒவ்வொருவரும் தங்கள் சொந்த வழியில் அழகானவர்கள் தான்' என கூறியுள்ளார்.



சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

பிற மொழிக்கு | Read In

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................