அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், மேரி கோம் உள்ளிட்ட 141 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு!!

7 பத்ம விபூஷன், 16 பத்ம பூஷன், 118 பத்ம ஸ்ரீ விருதுகள் இந்தாண்டு வழங்கப்படவுள்ளது. அவர்களில் 34 பேர் பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்ம விருதுகள் 2020 : அருண் ஜெட்லியும், சுஷ்மா சுவராஜும் கடந்த ஆண்டு காலமானார்கள்.

ஹைலைட்ஸ்

  • மறைந்த கோவா முதல்வர் மனோகர்பாரிக்கருக்கு பத்ம பூஷன் அறிவிக்கப்பட்டுள்ளது
  • கரன் ஜோகர், கங்கனா ரனாவத்துக்கு பத்ம ஸ்ரீ விருது
  • தொழில் அதிபர் ஆனந்த் மகேந்திராவுக்கு பத்ம பூஷன் விருது
New Delhi:

முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோருக்கு மறைவுக்கு பின்னர் பெருமை மிக்க பத்ம விபூஷன் விருதுகள் வழங்கப்படுகின்றன. இது இந்தியாவின் 2-வது மிகப்பெரும் கவுரவ விருதாக உள்ளது. இந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமையன்று வெளியிட்டது.  

இதேபோன்று மறைந்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 7 பத்ம விபூஷன், 16 பத்ம பூஷன், 118 பத்ம ஸ்ரீ விருதுகள் இந்தாண்டு வழங்கப்படவுள்ளது. அவர்களில் 34 பேர் பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மேரி கோமுக்கு பத்ம விபூஷன், பேட்மின்ட்டன் வீராங்கனை பி.வி..சிந்துவுக்கு பத்ம பூஷன் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல பாடகர் சன்னுலால் மிஷ்ராவுக்கு பத்ம விபூஷன் விருதும், பின்னணி பாடகர் சுரேஷ் வட்காருக்கு பத்ம ஸ்ரீ விருதும் அளிக்கப்படுகிறது.

பாலிவுட் பிரபலங்களான இயக்குனர் கரன் ஜோகர், நடிகை கங்கனா ரணாவத் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருதும் வழங்கப்படுகின்றன.

என்.ஆர்.ஐ. மற்றும் வெளிநாட்டவர்களுக்கும் பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. மொரீஷியஸ் பிரதமர் அனிரூத் குகநாத்துக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் அதிபர்கள் ஆனந்த் மகேந்திரா, வேனு ஸ்ரீனிவாசன், முன்னாள் நாகலாந்து முதல்வர் எஸ்.சி. ஜமீர், ஜம்மு காஷ்மீர் அரசியல்வாதி முசாபர் உசைன் பேக் ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது அளிக்கப்படுகிறது.

Naukri.com நிறுவனர் சஞ்சீவ் பிக்சந்தானி, தொழில் அதிபர் பாரத் கோயங்கா, தொழில்நுட்ப வல்லுனர் நேம்நாத் ஜெய்ன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தன்னிகரற்ற சிறப்பான சேவையை நாட்டுக்கு வழங்கியமைக்காக பத்ம விபூஷன் விருதுகளும், உயர்மட்ட அளவில் சிறப்பான சேவை செய்தமைக்காக பத்ம பூஷன் விருதுகளும், தங்களது துறைகளில் சிறப்பானை சேவை வழங்கியதற்காக பத்ம ஸ்ரீ விருதுகளும் வழங்கப்படுகின்றன. ஒவ்வோராண்டும் குடியரசு தின விழாவை முன்னிட்டு இந்த விருதுகள் வழங்கப்படும்.

More News