This Article is From Sep 11, 2019

INX Media corruption case: ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிதம்பரம் மனுத்தாக்கல்

சிதம்பரம் இசட் பாதுகாப்பு பிரிவில் இருக்கும் நபர் என்பதால் திகார் சிறையில் ஒரு தனி அறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

INX Media corruption case: ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் சிதம்பரம் மனுத்தாக்கல்

டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. (File)

New Delhi:

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கவும், சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த சிறையில் அடைக்கும் உத்தரவை ரத்து செய்யவும் கோரி அவரது சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

73 வயதான காங்கிரஸ் தலைவரை ஆகஸ்ட் 21 ஆம் தேதி சிபிஐ கைது செய்தது. சிதம்பரத்திற்கு இருக்கும் பலத்தினால் ஆதாரம் அழிக்கப்படும் என்று சிபிஐ அச்சம் கொண்டது. சிதம்பரம் இசட்  பாதுகாப்பு பிரிவில் இருக்கும் நபர் என்பதால் திகார் சிறையில் ஒரு தனி அறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 

கடந்த 5-ம் தேதி நடந்த விசாரணையின் பொது அமலாக்கத் துறையிடம் சரணடையத் தயாராக உள்ளதாக சிதம்பரம் தரப்பில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.  

அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தில் முறைகேடு நடந்ததாக குற்றம்  சாட்டி ஐ.என்.எக்ஸ் மீடியா குழுமத்திற்கு சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த காலத்தில் ரூ.305 கோடி பெற்றதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக அமலாக்கத்துறை 2017 ம் ஆண்டில் பண மோசடி வழக்கு பதிவு செய்தது. 

2004 முதல் 2014 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் மத்திய உள்துறை அமைச்சராகவும் நிதியமைச்சராகவும் சிதம்பரம் இருந்தார்.

.