"ஐ.எம்.எஃப். கீதா கோபிநாத் மீதான தாக்குதலுக்கு தயாராகுங்கள்"; ப.சிதம்பரம் கிண்டல்!

சர்வதேச நாணய நிதியம் இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை 4.8 சதவீதமாகக் குறைத்துள்ளது, இது கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 1.3 சதவீதமாக குறைந்துள்ளது.

சர்வதேச நாணயத்தின் இந்த திருத்தம் ஒரு சிறிய விளக்கம் தான் என்றும், பொருளாதார வளர்ச்சி இன்னும் குறைய வாய்ப்புள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

New Delhi:

இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி அமைப்பை கீழ்நோக்கி மாற்றியமைத்ததைத் தொடர்ந்து, சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) மற்றும் அதன் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் ஆகியோரை மத்திய அமைச்சர்கள் உடனடியாக தாக்குவார்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, "சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத்தே முதன்முதலில் பணமதிப்பிழப்பை கண்டித்தார். சர்வதேச நாணய நிதியம் மற்றும் கீதா கோபிநாத் மீது மத்திய அமைச்சர்கள் நடத்த உள்ள தாக்குதலுக்கு நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

சர்வதேச நாணய நிதியம் இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை 4.8 சதவீதமாகக் குறைத்துள்ளது, இது கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 1.3 சதவீதமாக குறைந்துள்ளது. 

சர்வதேச நாணயத்தின் இந்த திருத்தம் ஒரு சிறிய விளக்கம் தான் என்றும், பொருளாதார வளர்ச்சி இன்னும் குறைய வாய்ப்புள்ளது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். 

தன் மீதான ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகள் குறித்து நடைபெற்ற விசாரணை அரசியல் உந்துதல் காரணமானது என்று உறுதியாக கூறிய ப.சிதம்பரம், எதிர்கட்சியில் இருந்து அரசை மிக கடுமையாக விமர்சிக்கும் ஒருவராக இருந்து வருகிறார். சிதம்பரம் மூன்று மாதங்களுக்கும் மேலாக சிறையில் கழித்தபோதும் கடுமையான விமர்சனங்களை ட்விட்டரில் பதிவேற்றி வருகிறார்.

பொருளாதாராத்தை தவறுதலாக கையாள்வதாக அவர் அரசு மீது அடிக்கடி கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். தற்போது மோசமான பெருளாதார மந்தநிலையில் இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டு வருகிறார்.

இந்த மாத தொடக்கத்தில், நடப்பு நிதியாண்டில் 5 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று அரசு கணித்தது. இது 11 ஆண்டுகளில் இல்லாத மிக குறைவான வேகமாகும். இதனால், அடுத்த மாதம் பட்ஜெட்டை முன்வைக்கும் போது, கூடுதல் நிதி ஊக்கத்தை பெற நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனை தூண்டும் என்று அவர் கூறியுள்ளார். 

இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள சரிவு, உலக அளவிலும்கூட பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், உலகளாவிய வளர்ச்சி கணிப்பை 0.1 சதவீதமாகக் குறைத்துள்ளது என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் தெரிவித்துள்ளார். 

Listen to the latest songs, only on JioSaavn.com