திகார் சிறையிலிருந்து வெளியே வரும் P Chidambaram- அடுத்து அமலாக்கத் துறை கஸ்டடி!

INX Media money laundering case - முன்னதாக அமலாக்கத் துறை, சிதம்பரத்தை 14 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முறையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

 Share
EMAIL
PRINT
COMMENTS
திகார் சிறையிலிருந்து வெளியே வரும் P Chidambaram- அடுத்து அமலாக்கத் துறை கஸ்டடி!

P Chidambaram அமலாக்கத் துறையின் பிடியில் வரும் 24 ஆம் தேதி வரை இருப்பார்.


New Delhi: 

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், இன்று திகார் சிறையில் இருந்து வெளியே வர இருக்கிறார். தொடர்ந்து அவர், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை கஸ்டடிக்கு அனுப்பப்பட இருக்கிறார். அவர் அமலாக்கத் துறையின் பிடியில் வரும் 24 ஆம் தேதி வரை இருப்பார். 

இது குறித்த ஆணையை டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குகார் பிறப்பித்தார். 

முன்னதாக அமலாக்கத் துறை, சிதம்பரத்தை 14 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முறையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 2000 ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, சிபிஐ கடந்த 2017 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. அதனடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் கடந்த 2018-இல் வழக்குப்பதிவு செய்தது. சிபிஐ, ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி கைது செய்தது. பின்னர், அவரை காவலில் எடுத்து, சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்ட அவர், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, சில நாட்களுக்கு முன்னர் அமலாக்கத் துறை, சிதம்பரத்தைக் கைது செய்ய வேண்டும் என்றும், தங்கள் கஸ்டடியில் சிதம்பரத்தை வைத்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் முறையிட்டது. அதில் முன்னதாக கைது செய்ய மட்டும் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. தற்போது கஸ்ட்டிக்கும் நீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................