“வாங்க சிறைக்குப் போவோம்..!”- தொண்டர்களுக்கு பலே அட்வைஸ் கொடுக்கும் ப.சிதம்பரம்

"சிறைக்குச் சென்றுதான் நாம் பல விவாதங்களை நடத்தியுள்ளோம். பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம்"

 Share
EMAIL
PRINT
COMMENTS
“வாங்க சிறைக்குப் போவோம்..!”- தொண்டர்களுக்கு பலே அட்வைஸ் கொடுக்கும் ப.சிதம்பரம்

"மக்களுக்காக போராடி தொண்டர்கள் சிறைக்குச் செல்ல தயாராக இருந்தால், நானும் தயார்"


சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காரைக்குடியில் புதியதாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்து தொண்டர்கள் முன்னிலையில் உரையாற்றினார். அவர் பேசும்போது, “எல்லாரும் சிறைக்குப் போவோமா..?” என்று கூறி பரபரப்பைக் கிளப்பினார். 

தொடர்ந்து அவர், “சிறைக்குச் செல்வது தற்போதைக்குக் காங்கிரஸ் கட்சிக்கு நல்லது. காரணம் நேரு, காந்தி காலத்தில் இருந்தே நாம் சிறைக்குச் சென்றுதான் பலவற்றைச் சாதித்துள்ளோம்.

சிறைக்குச் சென்றுதான் நாம் பல விவாதங்களை நடத்தியுள்ளோம். பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளோம். 

எனவே மீண்டும் காங்கிரஸ் கட்சியினர் சிறைக்குச் செல்ல வேண்டும். மக்களுக்காக போராடி தொண்டர்கள் சிறைக்குச் செல்ல தயாராக இருந்தால், நானும் தயார். சிறைக்குச் சென்று 15 - 20 நாள் அங்கேயே இருப்போம். பலவற்றை குறித்து விவாதிப்போம். வெளியே வரும்போது கட்சி இன்னும் வலுவானதாக மாறும்” எனப் பேசினார்.

ப.சிதம்பரத்தின் இந்தப் பேச்சுக்கு கூடியிருந்த தொண்டர்கள் கைதட்டி ரசித்தனர். சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................