ராயபுரத்தில் 3000; தண்டையார்பேட்டையில் 2000 பேருக்கு பாதிப்பு - சென்னை கொரோனா நிலவரம்!

ஜூன் 3 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 16,585 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராயபுரத்தில் 3000; தண்டையார்பேட்டையில் 2000 பேருக்கு பாதிப்பு - சென்னை கொரோனா நிலவரம்!

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 8,506 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • சென்னையிலேயே ராயபுரம் மண்டலம்தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது
  • வட சென்னையில் கொரோனா தீவிரமடைந்து வருகிறது
  • நாட்டில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து தமிழகத்தில்தான் அதிக கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் நேற்று 1,091 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 806 பேர். ஒட்டுமொத்த அளவில் 24,586 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 536 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 13,706 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 10,680 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 13 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 197 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (02.06.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 559

மணலி - 228

மாதவரம் - 400

தண்டையார்பேட்டை - 2,007

ராயபுரம் - 3,060

திரு.வி.க நகர் - 1,711

அம்பத்தூர் - 619

அண்ணா நகர் - 1,411

தேனாம்பேட்டை - 1,871

கோடம்பாக்கம் - 1,921

வளசரவாக்கம் - 910

ஆலந்தூர் - 243

 அடையாறு - 949

பெருங்குடி - 278

சோழிங்கநல்லூர் - 279

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 139

ஜூன் 3 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 16,585 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 8,506 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 135 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 7,805 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 3,060 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தண்டையார்பேட்டை மண்டலத்திலும், கோடம்பாக்கம் மண்டலத்திலும் முறையே 2,007 மற்றும் 1,921 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 228 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.