சென்னையில் ஒரே நாளில் 1000 பேர் டிஸ்சார்ஜ்; ஜூலை 6 மண்டலவாரியாக கொரோனா தொற்று விவரம்!

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 42,309 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

சென்னையில் ஒரே நாளில் 1000 பேர் டிஸ்சார்ஜ்; ஜூலை 6 மண்டலவாரியாக கொரோனா தொற்று விவரம்!

சென்னையிலேயே அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,837 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.

ஹைலைட்ஸ்

  • சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது
  • சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கட்ட 62% பேர் மீண்டு வந்துள்ளனர்
  • 1,054 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள்

தமிழகத்தில் நேற்று 4,150 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,713 பேர். ஒட்டுமொத்த அளவில் 1,11,151 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 2,186 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 62,778 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 46,860 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 60 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 1,510 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக உள்ள ஆக்டிவ் கேஸ் விவரம் (06.07.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 1,214

மணலி - 531

மாதவரம் - 949

தண்டையார்பேட்டை - 2,275

ராயபுரம் - 2,426

திரு.வி.க நகர் - 1,858

அம்பத்தூர் - 1,360

அண்ணா நகர் - 2,349

தேனாம்பேட்டை - 2,317

கோடம்பாக்கம் - 2,837

வளசரவாக்கம் - 1,245

ஆலந்தூர் - 968

 அடையாறு - 1,913

பெருங்குடி - 919

சோழிங்கநல்லூர் - 621

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 1,108

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 42,309 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 1,000 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இது 62 சதவீத மீட்பு விகிம் ஆகும். 1,054 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 24,890 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

சென்னையிலேயே அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,837 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அதைத் தொடர்ந்து ராயபுரம் மண்டலத்திலும் மற்றும் அண்ணா நகர் மண்டலத்திலும் முறையே 2,426 மற்றும் 2,349 பேருக்கு கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 531 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள்.