நாடு முழுவதும் ஒரே நாளில் 54,000 பேருக்கு கொரோனா பாதிப்பு! 823 பேர் உயிரிழப்பு!!

நாடு முழுவதும் இதுவரை 1,98,21,831 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில் 11.81 சதவிகிதத்தினர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் ஒரே நாளில் 54,000 பேருக்கு கொரோனா பாதிப்பு! 823 பேர் உயிரிழப்பு!!

ஹைலைட்ஸ்

  • கடந்த 24 மணி நேரத்தில் 54,735 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்
  • மொத்த எண்ணிக்கையானது 17,50,723 ஆக அதிகரித்துள்ளது.
  • கடந்த 24 மணிநேரத்தில் 823 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
New Delhi:

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17.50 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 54,735 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த எண்ணிக்கையானது 17,50,723 ஆக அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் இந்த பாதிப்பு எண்ணிக்கையானது 17.5 மில்லியனாக அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கேரளாவில் முதல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

கடந்த 24 மணிநேரத்தில் 823 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37,364 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 11.45 லட்சம் மக்கள் தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளனர். குணமடைவோரின் விகிதமானது 65.43 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 1,98,21,831 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில் 11.81 சதவிகிதத்தினர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.