This Article is From Feb 05, 2020

கொரோனா வைரஸ் பாதிப்பு : இந்தியாவில் 5 ஆயிரம்பேர் கண்காணிப்பில் உள்ளதாக மத்திய அரசு தகவல்

கொரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் குறித்த கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை, வெளியுறவு அமைச்சகம், விமானப் போக்குவரத்து துறை உள்ளிட்டவற்றின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு : இந்தியாவில் 5 ஆயிரம்பேர் கண்காணிப்பில் உள்ளதாக மத்திய அரசு தகவல்

சீனாவுக்கு ஜனவரி 15-ம்தேதியில் இருந்து சென்று திரும்பியவர்கள், கட்டாயக் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

New Delhi:

கொரோனா வைரஸ் பாதிப்பின்பேரில் நாட்டில் தற்போது வரையில் 5 ஆயிரத்து 123 பேர் கண்காணிப்பில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. இவர்களில் 741 பேருக்கு கொரோனா வைரஸ் சோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 738 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேருக்கு மட்டும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு இருக்கிறது. மொத்தத்தில் 5123 பேர் சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் இருப்பதாக அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

முன்னதாக மத்திய அமைச்சரவை செயலர் ராஜிவ் கவுபா தலைமையில் உயர்மட்ட அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில் கொரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. நாட்டில் இந்த வைரஸின் பாதிப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 

இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை, விமானப் போக்குவரத்து துறை, சுகாதார ஆய்வு, தேசிய பேரிடர் மீட்பு படை, உள்துறை அமைச்சகம், வர்த்தகத்துறை, ராணுவம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

சீனாவில் இருந்து இந்தியா வர விரும்புவோம், புதிதாக விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. 

சீனாவுக்கு ஜனவரி 15-ம்தேதியில் இருந்து சென்று திரும்பியவர்கள், கட்டாயக் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.